ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் கருவேல மரங்களால் அழிந்த கால்வாய் வழித்தடம்... விவசாயம் பாதிப்பால் விவசாயிகள் கவலை...

ராமநாதபுரத்தில் கருவேல மரங்களால் அழிந்த கால்வாய் வழித்தடம்... விவசாயம் பாதிப்பால் விவசாயிகள் கவலை...

கால்வாய் வழித்தடம்

கால்வாய் வழித்தடம்

Ramnad | வைகை ஆற்றின் வலது, இடது பிரதான கால்வாய்களில் கருவேல மரங்கள் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் வழித்தடங்கள் இல்லாமல் கால்வாய்கள், கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல முடியாமல் விவசாயம் பாதிப்பு. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் உருவாகும் வைகை ஆறு தொடர்ச்சியாக பார்த்தீனூர், பரமக்குடி வழியாக ராமநாதபுரத்திற்கு சென்று பெருங்குளம் அருகே கடலில் கலக்கிறது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து வலது, இடது பிரதான கால்வாய்கள் மூலம் 202 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது. 45 கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த கால்வாய் மூலம் ஒரு லட்சத்து 68 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல், மிளகாய், பருத்தி உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன.

இதையடுத்து, 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டத்திற்க்கு வைகை ஆற்றில் மூன்று முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வலது, இடது பிரதான கால்வாய்களில் அதிகளவு கருவேல மரங்கள், நாணல்கள் வளர்ந்துள்ளதால் தண்ணீர் செல்ல முடியாமல் தண்ணீரை திறந்து விடாமல் நேரடியாக கடலில் கலக்கிறது.

இதையும் படிங்க : பசும்பொன் தேவர் ஜெயந்தி : சென்னை கண்ட்ரோல் ரூமிலிருந்து கண்காணிப்பு – சைலேந்திர பாபு தகவல்

வலது பிரதான கால்வாயை நம்பி 54 கன்மாய்கள், இடது பிரதான கால் வகையை நம்பி 148 கண்மாய்கள் ராமநாதபுரத்தில் உள்ளன.மேலும், கால்வாயில் 30 அடி வரை கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. அதிகளவில் வளர்ந்துள்ள கருவேல மரங்களால் கால்வாய்களின் வழித்தடம் அழிந்துள்ளது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை 130 கண்மாய்களுக்கு மட்டுமே தண்ணீர் செல்கிறது. குறிப்பாக இடது பிரதான கால்வாயை நம்பி உள்ள பாண்டியூர், சித்தனேந்தல், பகைவன்றி, சிறகிகோட்டை, நயினார்கோவில் உள்ளிட்ட கண்மாய்களுக்கு இன்னும் வைகை தண்ணீர் சிறிதளவு கூட செல்லாத நிலை உள்ளது. இடது பிரதான கால்வாயை நம்பி உள்ள கண்மாய்களில் 10% தண்ணீர் கூட நிரம்ப வில்லை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால் இப்பகுதியில் விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே வைகை ஆற்றின் வலது, இடது பிரதான கால்வாய்களை சுத்தம் செய்து கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramnad