கமுதி அருகே பெருநாளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டு வண்டி வீரர்கள் பங்கேற்ற இரட்டை மாட்டுவண்டி போட்டியானது நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழியில் முதலமைச்சர் முகஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயமானது நடத்தப்பட்டது. இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் கமுதி அருப்புக்கோட்டை சாலையில் 15 கிலோமீட்டர் தூரம் வரையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு போட்டியானது தொடங்கியது.
இந்த போட்டியில், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி வீரர்கள் தங்களது மாடுகளுடன் பந்தயத்தில் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, போட்டியின்போது மாடானது கால்வாய்க்குள் இறங்கி தண்ணீருக்குள் சென்றதால் மாடுகளை மீட்கும் வரையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதனைத் தொடர்ந்து, வெற்றி இலக்கை நோக்கி பாய்ந்து முதல் மூன்று இடங்களை பிடித்த மாடுகளுக்கு பரிசுகள், ரொக்கப்பணமும், கேடயமும் வழங்கப்பட்டது.
இதில் கமுதியைச் சேர்ந்த சிவநாதன் முதல் இடமும், சிவகாசியைச் சேர்ந்த முத்து கருப்பு இரண்டாம் இடமும், பெருநாளியைச் சேர்ந்த ரகுநாதன் மூன்றாம் பரிசையும் வென்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram