முகப்பு /ராமநாதபுரம் /

19 ஆண்டு காலம் நாட்டுக்கு சேவை- சொந்த ஊர் திரும்பி ராணுவ வீரருக்கு பொதுமக்கள் அளித்த உற்சாக வரவேற்பு

19 ஆண்டு காலம் நாட்டுக்கு சேவை- சொந்த ஊர் திரும்பி ராணுவ வீரருக்கு பொதுமக்கள் அளித்த உற்சாக வரவேற்பு

X
ராணுவ

ராணுவ வீரருக்கு வரவேற்பு

Ramanathapuram |பரமக்குடியில் ஓய்வு பெற்று வந்த ராணுவ வீரருக்கு ஊர்மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

பரமக்குடியில் ஓய்வு பெற்று வந்த ராணுவ வீரருக்கு, சேதுசீமை பட்டாளம் பகுதியைச் முன்னாள் ராணுவ வீரர்கள் இணைந்து வரவேற்பு கொடுத்த நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். கடந்த 2004-ம் ஆண்டு ராணுவப்பணியில் சேர்ந்து பல்வேறு இடங்களில் 19 ஆண்டுகளாக பணிபுரிந்து ஹவில்தாராக பதவி வகித்து தற்போது ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், ராணுவத்தில் பணியாற்றி பணியை நிறைவு செய்து ஊர் திரும்பியவரை பரமக்குடி ரயில்வே நிலையத்தில் இருந்து வீடு வரை மேளதாளங்கள் முழங்க பரமக்குடி சேதுசீமை பட்டாளம் என்ற முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் விமர்சையாக வரவேற்றனர்.

பணி ஓய்வு பெற்று பரமக்குடிக்கு வருகை தந்த சிவக்குமாருக்கு மாலை, சால்வை அணிவித்து, தாரை தப்பட்டை முழங்க வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ராமேஸ்வரத்தில் இரண்டு வருடங்களாக பயன்பாடின்றி கிடக்கும் கழிப்பறைகள்: பக்தர்கள் அவதி - தீர்வு கிடைக்குமா

இதனை கண்ட அவரது உறவினர்கள் ஆனந்த கண்ணீருடன் நெகிழ்ச்சியாக வரவேற்றனர். ராணுவ வீரரை வரவேற்ற நெகிழ்ச்சியான நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

First published:

Tags: Local News, Ramanathapuram