ஹோம் /ராமநாதபுரம் /

பரமக்குடி நகராட்சியில் 96 பயனாளிகளுக்கு வீடு கட்ட மானியம்

பரமக்குடி நகராட்சியில் 96 பயனாளிகளுக்கு வீடு கட்ட மானியம்

X
பரமக்குடி

பரமக்குடி

Ramanathapuram District News : பரமகுடியில் 96 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு மானியம் வழங்குவதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் மானியத்துடன் வீடுகட்ட, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் உள்ள 96 பயனாளிகளுக்கு உத்தரவு நகல் நகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் குடிசை இல்லா வீடுகளை உருவாக்குவதற்காக தமிழ்நாடு அரசின் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்து சுயமாகவும் எளிதாகவும் வீடு கட்டுவதற்கு ஆணைகள் வழங்கி வருகிறது.

இதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 96 நபர்கள் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டிருந்தனர்‌.

இதையும் படிங்க : இளைஞரை கொலை செய்ய நீதிமன்றத்தில் காத்திருந்த கும்பல் - பயங்கர ஆயுதங்களுடன் 7பேர் கைது

இந்நிலையில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உத்தரவு நகல் நகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் சுயமாக வீடு கட்டும் பயனாளிகளுக்கு 2.10 லட்ச ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்றும், நான்கு தவணைகளாக மானியத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வீடற்ற ஏழை எளியவர்களுக்கு வீடு கட்டுவதற்கு மானியத்துடன் உத்தரவு நகல் வழங்கப்பட்டதால் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்து, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram