ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் வேதாளை கடற்கரையில் 850 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

ராமநாதபுரம் வேதாளை கடற்கரையில் 850 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

கடல் அட்டைகள் பறிமுதல்

கடல் அட்டைகள் பறிமுதல்

Ramanathapuram Sea cucumber seize | ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 850 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram

இலங்கைக்கு கடத்த இருந்த 850 கிலோ கடல் அட்டைகள், நாட்டுப்படகுகள், ஒரு டிராக்டர் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்து ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தப்பட உள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து மரைன் காவ| ல்துறையினர், கியூ பிராஞ்ச் காவல்துறையினர் மற்றும் ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவினர் ஆகியோர் கூட்டாக வேதாளை கடற்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வேதாளை குறவன் தோப்பு பகுதியில் இருந்து வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில் 21 சாக்கு மூட்டைகளில் பதப்படுத்தப்பட்ட காய்ந்த கடல் அட்டைகள் இருந்துள்ளது.

இதையடுத்து, டிராக்டரை ஓட்டி வந்த வேதாளையை சேர்ந்த முகமது அப்துல் ( 20 ) என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்ததில் கடல் அட்டைகளை நாட்டுப்படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்தது தெரிந்தது.

மேலும், கடத்தலுக்கு பயன் படுத்திய அதி நவீன மோட்டார் பொருத்திய 2 நாட்டுப்படகுகள், ஒரு டிராக்டர் மற்றும் 850 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்தனர். கடல் அட்டையின் சர்வதேச மதிப்பு சுமார் 70 லட்சம் ரூபாய் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram, Smuggling