முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் அருகே ரூ.6 லட்சம் மதிப்பிலான 75 கிலோ கடல் அட்டை பறிமுதல்

ராமநாதபுரம் அருகே ரூ.6 லட்சம் மதிப்பிலான 75 கிலோ கடல் அட்டை பறிமுதல்

X
6

6 லட்சம் மதிப்பிலான –75 கிலோ கடல் அட்டை பறிமுதல்

Ramanathapuram District: திருவாடணையில் இருந்து மண்டபத்திற்கு சரக்கு வாகனத்தில் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை, ஏற்றி செல்வதாக  ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட 75 கிலோ கடல் அட்டைகளுடன் ஒருவரை கைது செய்தனர், தப்பி ஓடிய மற்றொரு நபரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருவாடணையில் இருந்து மண்டபத்திற்கு சரக்கு வாகனத்தில் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை, ஏற்றி செல்வதாக  ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, ராமநாதபுரம், கேணிக்கரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான முறையில் அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி காவல்துறையினர் விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்ததால் அந்த வாகனத்தை காவல்துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது, மூன்று சாக்கு மூடைகளில் சுமார் 75 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து சரக்கு வாகனத்தில் இருந்த ஒருவர் தப்பி ஓடினார். அந்த வாகன ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

காவல்துறையினரின் விசாரணையில் கடல் அட்டைகள் இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட இருந்தது தெரியவந்தது, இதனைத் தொடர்ந்து திருவாடணை பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவரிடம் இருந்த சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட சுமார் 75 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்து, பின் ராமநாதபுரம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடத்தல் சம்பவங்கள் சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.

First published:

Tags: Ramanathapuram, Rameshwaram