முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் திமுக சார்பில் ரத்ததான முகாம்.. பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்!

ராமநாதபுரத்தில் திமுக சார்பில் ரத்ததான முகாம்.. பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்!

X
ரத்த

ரத்த தான முகாம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மண்டபம் மேற்கு ஒன்றிய திமுகவினர்‌ சார்பில் நடைபெற்ற ரத்ததானம் முகாமில் 70 இளைஞர்கள் இரத்ததானம் செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மண்டபம் மேற்கு ஒன்றிய திமுகவினர்‌ சார்பில் நடைபெற்ற ரத்ததானம் முகாமில் 70 இளைஞர்கள் இரத்ததானம் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சாத்தாங்குளம் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மண்டபம் மேற்கு ஒன்றிய திமுகவின் சார்பில் ரத்ததானம் முகாம் நடைபெற்றது.

சாத்தாங்குளம் கிராமத்தில் நடைபெற்ற இந்த ரத்ததானம் முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த 70 இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களது ரத்தினை தானம் செய்தனர்.

இரத்ததானம் செய்த இளைஞர்களுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையின் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த முகாமினை மாவட்ட கழக செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

First published:

Tags: Blood Donation, Local News, Ramanathapuram