முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் லோக் அதாலத் மூலம் 650 வழக்குகளுக்கு சமரச தீர்வு..

ராமநாதபுரத்தில் லோக் அதாலத் மூலம் 650 வழக்குகளுக்கு சமரச தீர்வு..

X
ராமநாதபுரத்தில்

ராமநாதபுரத்தில் லோக் அதாலத்

Lok Adalat in Ramanathapuram | ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, திருவாடானை, கமுதி, முதுகுளத்தூர் ஆகிய நீதிமன்றங்களில் நடைபெறும் 650 வழக்குகள் சமரசத் தீர்வு மூலம் தீர்வு காண முடிவு செய்து, மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா லோக் அதாலத்தை துவக்கி வைத்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 650 வழக்குகள் லோக் அதாலத் மூலம் சமரச தீர்வுகாக எடுத்து கொள்ளப்பட்டன.

நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், விவாகரத்து, வங்கி கடன் வழக்குகள் போன்ற வழக்குகளை சமரச தீர்வு மூலம் இருதரப்பினரிடமும் பேசி முடிவுக்கு கொண்டுவர லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் சார்பில் லோக் அதாலத் நடைபெற்றது. இதில், ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, திருவாடானை, கமுதி மற்றும் முதுகுளத்தூர் ஆகிய நீதிமன்றங்களில் நடைபெறும் 650 வழக்குகள் சமரசத் தீர்வு மூலம் தீர்வு காண முடிவு செய்து, மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா லோக் அதாலத்தை துவக்கி வைத்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த சமரசத் தீர்வில் விவாகரத்து, வாகன விபத்து ஆகிய வழக்கு தாக்கல் செய்திருந்தவர்களை நீதிபதிகள் இரு தரப்பிலும் பேசி சமரசம் செய்து உரிய தீர்வினை பெற்று கொடுத்தனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram