ஹோம் /ராமநாதபுரம் /

இலங்கைக்கு கடத்த இருந்த பெட்ரோல், மஞ்சள் உள்ளிட்ட ரூ.6 லட்சம் மதிப்புடைய பொருட்கள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த இருந்த பெட்ரோல், மஞ்சள் உள்ளிட்ட ரூ.6 லட்சம் மதிப்புடைய பொருட்கள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்

Dhanushkodi | வேதாளை கடற்கரை பகுதியில் நிறுத்தியிருந்த ஒரு நாட்டு படகை போலீசார் சோதனை செய்ததில் சுமார் 660 கிலோ சமையல் மஞ்சள், காலில் அணியும் 180 ஜோடி காலணிகள், 150 லிட்டர் பெட்ரோல் உள்ளிட்டவைகள் நாட்டுப்படகில் கடத்துவதற்கு தயாராக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த மஞ்சள், காலணிகள், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடிக்கு 20 கிலோமீட்டர் தொலைவில் இலங்கை உள்ளதால் தனுஷ்கோடி கடல் வழியாக சமையல் மஞ்சள்கள், கேரள கஞ்சா, கடல் அட்டை, கடல் குதிரை, போதைப்பொருள், உள்ளிட்டவைகள் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராமேஸ்வரம் துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்ஜெயனுக்கு வேதாளை கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்தல் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க : வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. பரமக்குடி தரைப்பாலத்தை 3வது முறையாக தொட்டு செல்லும் தண்ணீர்.. போக்குவரத்து பாதிப்பு..

இதையடுத்து, வேதாளை கடற்கரை பகுதியில் நிறுத்தியிருந்த ஒரு நாட்டு படகை போலீசார் சோதனை செய்ததில் சுமார் 660 கிலோ சமையல் மஞ்சள், காலில் அணியும் 180 ஜோடி காலணிகள், 150 லிட்டர் பெட்ரோல் உள்ளிட்டவைகள் நாட்டுப்படகில் கடத்துவதற்கு தயாராக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அந்த நாட்டுப்படகையும், அந்த படகில் இருந்த கடத்தல் பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு தயாராக இருந்த பொருட்களின் மதிப்பு சுமார் 6 லட்சம் வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனைத்தொடர்ந்து தனிப்படையினர் மண்டபம் காவல் நிலையத்தில் அவற்றை ஒப்படைத்தனர்.  பின்னர் மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கடத்தல்காரர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramnad