ஹோம் /ராமநாதபுரம் /

பூக்கடைக்குள் புகுந்த 5 அடி நீள பாம்பு.. ராமநாதபுரத்தில் பீதியில் உறைந்த மக்கள்..

பூக்கடைக்குள் புகுந்த 5 அடி நீள பாம்பு.. ராமநாதபுரத்தில் பீதியில் உறைந்த மக்கள்..

X
பூக்கடைக்குள்

பூக்கடைக்குள் புகுந்த 5 அடி நீள பாம்பு

Ramanathapuram District News : ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பூக்கடை பெட்டிக்குள் மறைந்திருந்த ஜந்தடிபாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினர் எடுத்து சென்று வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மேலும், நடைபாதை பகுதியில் சிறு வியாபாரிகள் கடைகள் வைத்தே தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து அலுவலகம் அருகே 5 அடி நீள பாம்பு ஒன்று பிரியா என்பவரின் பூக்கடைக்குள் புகுந்ததுள்ளது. அப்போது வியாபாரம் பார்க்க கடையை திறந்து பூவை எடுத்தபோது பாம்பு ஒன்று சுருண்டு கிடந்துள்ளது.

பெட்டிக்குள் இருந்து 5 அடி உடைய பாம்பை பார்த்து பயந்து போன பிரியா மற்றும் அருகில் இருந்த கடைக்காரர்கள் மற்றும் அந்த பகுதியில் இருந்த பயணிகள் பீதியில் உறைந்தனர். இதையடுத்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையும் படிங்க : பாம்பன் ரயில் பாலத்தில் அதிர்வு- ராமேஸ்வரத்துக்கு பதிலாக மண்டபத்திலிருந்து புறப்படும் ரயில்கள்

தகவலறிந்தது பேருந்து நிலையத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி பூக்கடையில் ஒளிந்திருந்த பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

செய்தியாளர் : மனோஜ்குமார் - ராமநாதபுரம்

First published:

Tags: Local News, Ramanathapuram