ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் உழவாரப்பணி மேற்கொண்ட 450 சிவனடியார்கள்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் உழவாரப்பணி மேற்கொண்ட 450 சிவனடியார்கள்

உழவார பணி மேற்கொள்ளும் சிவனடியார்கள்

உழவார பணி மேற்கொள்ளும் சிவனடியார்கள்

Rameshwaram | ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் இரண்டு நாட்களாக உள்புறம் மற்றும் வெளிப்புற திருக்கோவில் வளாகப்பகுதிகளில் சுமார் 450- க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் சேர்ந்து உழவாரப்பணியை மேற்கொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் இரண்டு நாட்களாக உள்புறம் மற்றும் வெளிப்புற திருக்கோவில் வளாகப்பகுதிகளில் சுமார் 450க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் சேர்ந்து உழவாரப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி, பின்னர் திருக்கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடி பின் சுவாமி தரிசனம் செய்வார்கள்.

திருக்கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் விட்டுச்செல்லும் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் பழைய துணிகள் உள்ளிட்டவைகள் ஆங்காங்கே தேங்கியுள்ளது. இதனை சுத்தம் செய்ய சிவனடியார்கள் முடிவு செய்து ராமேஸ்வரம் சேவாபாரதி தலைமையில் சுமார் 50 வயதிற்கும் மேல் உள்ள 450க்கும் மேற்பட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் உள்ள சிவனடியார்கள் இன்று ராமேஸ்வரம் வந்தனர்.

இதையும் படிங்க : பரமக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை ஏமாற்றி 17 சவரன் நகை, பணம் கொள்ளை

இதனைத்தொடர்ந்து இன்று ராமேஸ்வரம் கோவில் எதிரே உள்ள அக்னி தீர்த்த கடற்கரை படித்தரை, கடற்கரையில் தேங்கியுள்ள பக்தர்கள் விட்டு செல்லும் துணிகள்,  திருக்கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனம், கோசாலை பகுதிகளை சுத்தம் செய்தனர்.

மேலும் இரண்டு நாட்கள் உழவாரப்பணியை முடித்துவிட்டு ராமநாதபுரம் அடுத்துள்ள திருஉத்திரகோசமங்கை திருக்கோவிலில் உழவாரப்பணியை மேற்கொள்ள உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள சிவன் ஆலயங்கள் சென்று உழவாரப்பணி மேற்கொண்டு வருகிறோம். கடந்த 2015ம் ஆண்டு ராமேஸ்வரம் பகுதிக்கு வந்து ராமநாதசுவாமி திருக்கோவில் சுத்தம் செய்துவிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம், உத்தரகோசமங்கை, சேதுக்கரை, திருப்புல்லாணி, ராமநாதபுரம் சிவன் ஆலயம் ஆகிய அனைத்து தலம் உங்களுக்கும் சென்று உழவர் பணி மேற்கொண்டோம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இவ்வாறு சிவன் ஆலயங்களுக்கு சென்று உழவாரப்பணி மேற்கொள்வது, சிவனுக்கே உதவி செய்வதுபோல் பாக்கியம். எங்களுக்கு இத்தகைய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததற்கு நன்றி. சேவா பாரதிற்கு நன்றி” என தெரிவித்தனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram