ராமநாதபுரத்தில் 40 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர் தண்ணீர் இன்றி கருகியதால், காய்ந்து கருகிப்போன நெற் பயிர்களுடன் விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்துப் போனதால் பருவமழையை எதிர்பார்த்து பயிரிட்டு இருந்த திருவாடானை மற்றும் ஆர்.எஸ். மங்கலம் பகுதி விவசாயிகள் பயிரிட்ட நெற்பயிர் காய்ந்து கருகிப் போனதால் வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய இரண்டு ஒன்றியங்களில் 40 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டனர். தற்போது நெற்பயிர் முழுவதும் கருகிப் போனதால் தங்களுக்கு பயிர் காப்பீடு, வறட்சி நிவாரணம் மற்றும் இழப்பீட்டுத் தொகை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகளும் விவசாய பெண்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கண்களை கட்டி சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த ராமநாதபுரம் மாணவர்கள்
செய்தியாளர்: மனோஜ் குமார், ராமநாதபுரம்.
Tags: Local News, Ramanathapuram