முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் | ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி கோரி 40 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆட்சியரிடம் மனு

ராமநாதபுரம் | ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி கோரி 40 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆட்சியரிடம் மனு

X
கோரிக்கை

கோரிக்கை அளிக்கும் மக்கள்

Ramanathapuram | ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி கோரி 40 கிராம மக்கள் ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

திருப்புல்லாணி அய்யனார் கோவில் திருவிழாவிற்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 40 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம்‌ கோரிக்கை மனு அளித்துள்ளர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள பொக்கனாரேந்தல், சாத்துடையார் அய்யனார் கோவில் திருவிழா மே மாதம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 40-கிராமங்களைச் சேர்ந்தவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில், திருப்புல்லாணி சுற்று வட்டார கிராமங்களான முத்து வீரப்பன் வலசை, பள்ளபச்சேரி, ஆர்.எஸ்.மடை, தாதனேந்தல், பால்கரை, வீரன்வலசை உள்ளிட்ட 40 கிராமங்களை சேர்ந்த ஊர்தலைவர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் வருகின்ற மே மாதம் பொக்கனாரேந்தல் சாத்துடையார் அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றும், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram