Home /ramanathapuram /

மூட்டை மூட்டையாக கடல் அட்டைகள் பறிமுதல்.. பொறி வைத்து பிடித்த கடலோர காவல் படையினர்..

மூட்டை மூட்டையாக கடல் அட்டைகள் பறிமுதல்.. பொறி வைத்து பிடித்த கடலோர காவல் படையினர்..

இலங்கைக்கு

இலங்கைக்கு கடத்த இருந்த 350 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

Ramanathapuram District: இலங்கைக்கு கடத்த மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.

    சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட 350 கிலோ கடல் அட்டைகள் இந்திய கடலோர காவல் படையினரால் பறிமுதல் செய்து மண்டபம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    தமிழகத்தில் தற்போது 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஆனால், நாட்டுப்படகு மீனவர்கள் கரை ஓரத்தில் இருந்து 5  நாட்டிக்கல் மைல் தூரம் வரை சென்று மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாட்டுப்படகு மீனவர்கள் சிலர் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பிடித்து அதனை பதப்படுத்தி சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தி வருவதாக இந்திய கடலோர காவல்படைக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று இரவு ராமேஸ்வரம் அடுத்த சேராங்கொட்டை கடற்கரைப் பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மாட்டு வண்டியில் கடல் அட்டைகள் மூட்டை மூட்டையாக கட்டி எடுத்து செல்லப்பட்டுள்ளது, அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த இந்திய கடலோர காவல்படை வீரர்கள் மாட்டு வண்டியை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியதில் நாட்டு படகில் இருந்த கடல் அட்டைகளை எடுத்து சென்று சேரங்கோட்டை அருகே உள்ள மீன் கம்பெனி ஒன்றில் வைக்க சொன்னதாக மாட்டு வண்டியை ஓட்டி வந்தவர் தெரிவித்துள்ளார்.

    பின்னர் இந்திய கடலோர காவல்படையினர் 17 மூட்டைகள் இருந்தன கடல் அட்டைகள் பறிமுதல் செய்து கடல் அட்டைகளை மண்டபம் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

    இந்திய கடலோர காவல் படையினரால் ஒப்படைக்கப்பட்ட தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை ராமேஸ்வரம் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பாம்பன் அருகே உள்ள வனத்துறைக்கு சொந்தமான கடற்கரை மணலில் புதைத்தனர்.

    மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram, Rameshwaram

    அடுத்த செய்தி