ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் பேருந்து மோதி 32 செம்மறி ஆடுகள் பரிதாபமாக பலி- விவசாயி வேதனை

ராமநாதபுரத்தில் பேருந்து மோதி 32 செம்மறி ஆடுகள் பரிதாபமாக பலி- விவசாயி வேதனை

X
பலியான

பலியான ஆடுகள்

Ramanathapuram | ராமநாதபுரம் கமுதியில் சாலையில் சென்ற வாகனம் மோதி 32 செம்மறி ஆடுகள் பலியானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து, மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 32 செம்மறி ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கொல்லங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திருநாவுக்கரசு என்பவர் சுமார் 110- க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து பராமரித்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்‌. இந்நிலையில், கோவிலாங்குளம் என்ற கிராமத்தில் வயல்வெளியில் ஆட்டுக்கிடையை போட்டுவிட்டு, திருநாவுக்கரசின் சொந்த ஊரான கொல்லங்குளம் கிராமத்திற்கு சாலை வழியாக ஆடுகளை பத்தி கொண்டு சென்றுள்ளார்.

பலியான ஆடுகள்

இதையடுத்து, பாக்குவெட்டி பாலம் அருகே முதுகுளத்தூரில் இருந்து கமுதி நோக்கி சென்ற தனியார் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆடுகளின் மீது மோதியது. இந்த விபத்து நடந்த இடத்திலேயே 32 செம்மறி ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. அதனால், விவசாயி மிகுந்த கவலை அடைந்துள்ளார். இதுகுறித்து பேரையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையில் நடத்தி வருகின்றனர்.

10 நாட்களில் திருமணம்: சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்- ராமநாதபுரத்தில் சோகம்

மேலும் உயிரிழந்த செம்மறி ஆடுகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்ததையடுத்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது சொந்த நிதியில் விவசாயிக்கு நிதி உதவி வழங்கினார்.

செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.

First published:

Tags: Local News, Ramanathapuram