ராமநாதபுரத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது உத்திரகோசமங்கை மங்களநாதேஸ்வரர் திருக்கோவில் இந்த கோவிலானது 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாகும், இங்கு இருக்கும் இலந்தை மரமே 3000 ஆண்டுகள் தொன்மையானது என தொல்லியல் ஆய்வாளர்களால் ஆராய்ச்சி செய்யப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தலமானது, திருவாசகத்தில் மாணிக்கவாசகரால் பாடப்பெற்ற ஆலயமாகும், மாணிக்கவாசகர் 50 பாடல்களை இந்த திருத்தலத்தில் பாடியுள்ளார்.

உத்திரகோசமங்கை மங்களேசுவரர் திருக்கோவில்
தாழம்பூ வைத்து எந்தவொரு சுவாமியையும் வழிபடுவது கிடையாது, ஆனால் இங்கு தாழம்பு வைத்து வழிபடப்படுகிறது. தாழம்பூ வைத்து வழிபடுவதால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகும் என்பது ஜதீகம்.

உத்திரகோசமங்கை மங்களேசுவரர் திருக்கோவில்
ராவணனின் மனைவி மண்டோதரி இங்கு சாமி தரிசனம் செய்து வேண்டியபிறகு தான் திருமண தடை நீங்கி ராவணனை மனம் முடிந்ததாகவும் மங்களநாதர் ஆலயத்தை ராமாயணத்திற்கு முற்பட்ட சிவாலயம் என்றும் கூறுகின்றனர்.

உத்திரகோசமங்கை மங்களேசுவரர் திருக்கோவில் நுழைவு வாயில்..
மறுபிறவி அளிக்கக் கூடிய இத்திருத்தலம், பாவம், புண்ணியம் பார்க்காமல் அனைவருக்கும் மறுபிறவி அளிப்பதாக மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உத்திரகோசமங்கை மங்களேசுவரர் திருக்கோவில் கோபுரம்..
6 அடி உயரத்தில் மரகதத்தால் செய்யப்பட்ட நடராஜர் மரகததிருமேனி சந்தனக்காப்பில் காட்சி அளிக்கிறார். ‘தென்கைலாயம் (தென் கயிலாயம்)’, ‘ஆதிகாலத்து சிவாலயம் ’ மற்றும் உலகின் முதல் சிவாலயம் இதுவென கூறுகின்றனர். இங்கு தான் முதன்முதலில் ஆருத்ரா தரிசனம் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் பேருந்து நிலையத்திலிருந்து உத்திரகோசமங்கை கோவிலுக்கு செல்லும் பாதையை காட்டும் வரைபடம்..
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இத்திருத்தலம் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் மாலை 4 மணிமுதல் 8 மணிவரை திறந்திருக்கும்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.