முகப்பு /ராமநாதபுரம் /

300 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.. நெல்மடூர் வாழவந்தான் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..

300 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.. நெல்மடூர் வாழவந்தான் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..

X
நெல்மடூர்

நெல்மடூர் வாழவந்தான் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Vazavanthan Amman Temple : நெல்மடூர் கிராமத்தில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமையான வாழவந்தான் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா நடந்தது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நெல்மடூர் கிராமத்தில் உள்ள கண்மாயில் கரையில் அமைந்துள்ளது 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த வாழவந்தான் அம்மன் கோவில். நெல்மடூர் கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் விளையும், நெல், பருத்தி, மிளகாய் போன்றவை கொண்டு சுவாமிக்கு படையல் வைத்து வழிபட்டு வந்தனர்.

இந்த கோவிலின் கும்பாபிஷேகம் முதலாம் யாகசாலை பூஜையுடன் தொடங்கி தொடர்ந்து விநாயகர் பூஜை, வாஸ்து பூஜை போன்ற யாகபூஜை நடத்தப்பட்டது. வாழவந்தான் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டது.

நெல்மடூர் வாழவந்தான் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

இதனைத்தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க புனிதநீர் கொண்டுவந்து கலசத்தில் ஊற்றப்பட்டது. இதில் நெல்மடூர் கிராமத்தில் உள்ள சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை சிறப்பித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Ramanathapuram, Religion18