ஹோம் /ராமநாதபுரம் /

மாநில அளவிலான கலை திருவிழாவுக்காக புறப்பட்ட மாணவ, மாணவிகள்- வழிஅனுப்பி வைத்த ராமநாதபுரம் ஆட்சியர்

மாநில அளவிலான கலை திருவிழாவுக்காக புறப்பட்ட மாணவ, மாணவிகள்- வழிஅனுப்பி வைத்த ராமநாதபுரம் ஆட்சியர்

X
பேருந்தில்

பேருந்தில் புறப்படும் மாணவ, மாணவிகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற கலைதிருவிழாவில் வெற்றி பெற்று தேர்வான 300 மாணவர்கள், மாணவிகளை மாநில அளவிலான போட்டிக்கு மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து வழிஅனுப்பிவைத்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற 300 மாணவர்கள், மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து வழி அனுப்பிவைத்தார்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா மாவட்டங்கள் தோறும் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். ராமநாதபுரத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் 300 மாணவர்கள் மற்றும் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் கோவை, மதுரை, செங்கல்பட்டு, திருவள்ளுவர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் 28, 29, 30 ஆகிய நாட்களில் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

கலைத் திருவிழாவில் பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகளை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ராமநாதபுரத்தில் இருந்து 6 அரசு பேருந்துக்களில் அழைத்து செல்ல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்: தண்ணீரின்றி காய்ந்து கருகிய நெற்பயிர்கள்.. விவசாயிகள் முற்றுகை போராட்டம்!

வெற்றி பெற்று மாவட்டத்திற்கும் பள்ளிகளுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மாணவர்களிடம் கூறி வழி அனுப்பி வைத்தார்.

செய்தியாளர்: மனோஜ் குமார், ராமநாதபுரம்.

First published:

Tags: Local News, Ramanathapuram