ஹோம் /ராமநாதபுரம் /

இலங்கைக்கு படகில் கடத்த இருந்த 300 கிலோ கஞ்சா பறிமுதல்..!

இலங்கைக்கு படகில் கடத்த இருந்த 300 கிலோ கஞ்சா பறிமுதல்..!

இந்திய எல்லையில் இலங்கைக்கு கடத்த இருந்த படகில் இருந்து 300 கிலோ கஞ்சா பறிமுதல் 

இந்திய எல்லையில் இலங்கைக்கு கடத்த இருந்த படகில் இருந்து 300 கிலோ கஞ்சா பறிமுதல் 

மண்டபம் கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 300 கிலோ உடைய கஞ்சா பொட்டலம் இந்திய கடலோர காவல்படையினரால் பறிமுதல், நான்கு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

மண்டபம் கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 300 கிலோ உடைய கஞ்சா பொட்டலம் இந்திய கடலோர காவல்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு மஞ்சள், கஞ்சா, காலணிகள், கடல் அட்டை போன்றவை கடத்தப்படுவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இலங்கைக்கு அதிகப்படியான கஞ்சாவை கடத்தல்காரர்கள் கடத்த இருப்பதாக சென்னை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, சென்னையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதிக்கு வந்த அதிகாரிகள், இந்திய கடலோர காவல் படையினருடன் இணைந்து மண்டபம் பகுதியில் இருந்து இந்திய எல்லை கடல் பகுதிக்குள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ரோந்து பணியில் ஈடுபடும் போது கடலில் சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு நாட்டுப்படகை பிடித்து சோதனை செய்தபோது படகில் 300 கிலோ கஞ்சா கடத்துவதற்காக இருந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, நாட்டுப்படகையும், படகில் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்து அதில் வந்த நான்கு நபர்களையும் கைது செய்தனர்.அப்போது கஞ்சாவை வாங்க இலங்கை படகு ஒன்று இந்திய கடல் எல்லைக்குள் வந்ததாகவும், இந்திய கடலோர காவல்படையினரின் ரோந்து கப்பலை பார்த்ததும் திரும்பி இலங்கைக்கு சென்றுவிட்டதாகவும் கூறினர்.

Also Read: என்னையா ஒதுக்குனீங்க.. இப்ப பாருங்க.. சைக்கிள் ஓட்டும் நன்மைகள் பதாகைகளுடன் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் எடை சுமார் 300 கிலோ இருந்ததாகவும், அதில் 500 கிராம் ஆசிஸ் ஆயில் இருந்ததாகவும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by:Ramprasath H
First published:

Tags: Cannabis, Crime News, Ganja, Local News, Ramanathapuram