ஹோம் /Ramanathapuram /

அழகிய வனமாகும் சுங்கத்துறை அலுவலகம்.. 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்த அதிகாரிகள்..

அழகிய வனமாகும் சுங்கத்துறை அலுவலகம்.. 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்த அதிகாரிகள்..

சுங்கத்துறை

சுங்கத்துறை அலுவலகத்தில் மரம் நடுதல்..

Ramanathapuram District: 75வது சுதந்திர தினம் முடியவுள்ள நிலையில் அதனை  கொண்டாடும் வகையில் சுங்கத்துறை அலுவலகத்தில்  220 மரக்கன்றுகள் அதிகாரிகளால் நடப்பட்டன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  75வது சுதந்திர தின ஆண்டினை கொண்டாடும் வகையில்  ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் 220 மரக்கன்றுகள் நடப்பட்டன.  நாடு சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டினை  கொண்டாடும் வகையில் வாரம் ஒருமுறை ஓவ்வொரு நிகழ்ச்சிகள் அரசு மற்றும் அரசுதுறை சார்ந்த அலுவலகங்களில் நடைபெற்று வருகின்றன.

  அந்த வகையில்,   CBIC என்கிற Central Revenue Board சுங்கத்துறையினர் சார்பாக சுங்கத்துறை அலுவலங்களில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இந்நிலையில், சுங்கத்துறை அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பிடிபட்ட விசைப்படகுகளை அகற்றி அந்த இடத்தை சுத்தம் செய்து அதில் 25 வகையான 220-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் சுற்றுப்புற சூழலை மேம்படுத்தும் வகையிலும், புவிவெப்பமயமாதலை தடுக்கும் நோக்கிலும் நடப்பட்டன.

  பாதாம் , வேம்பு, புங்கை, நாவல் , நெல்லி போன்ற கனி தரும் 25 வகையான பயனுள்ள மரங்கள் நடப்பட்டன.

  இந்நிகழ்ச்சியியை மெரைன் இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் வேர்கோடு செயின்ட் ஜோஸப் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஜார்ச் தேவசகாயம் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தனர்.

  செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.

  Published by:Arun
  First published:

  Tags: Ramanathapuram, Rameshwaram