ஹோம் /ராமநாதபுரம் /

‘மிஸ்டர் ராம்நாடு’ ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றது யார் தெரியுமா? - வெற்றியாளர்கள் விவரம்!

‘மிஸ்டர் ராம்நாடு’ ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றது யார் தெரியுமா? - வெற்றியாளர்கள் விவரம்!

ஆணழகன் போட்டி

ஆணழகன் போட்டி

Ramnad | மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் மற்றும் சூராங்கோட்டை சோல்ஜர்ஸ் ஜிம் இணைந்து நடத்திய 20வது மிஸ்டர் ராம்நாடு போட்டியில் கலந்துகொண்டு தனது உடல் திறனை காட்டிய வீரர்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் மற்றும் சூரன்கோட்டை சோல்ஜர்ஸ் ஜிம் இணைந்து நடத்திய 20-வது மிஸ்டர் ராம்நாடு போட்டி ராமநாதபுரம் அருகே உள்ள குமரையாகோவில் பகுதியில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது.

இந்த அமெச்சூர் ஆணழகன் போட்டியில் 55 கிலோ முதல் 75 கிலோ வரை 6 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் 80க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்று ஒவ்வொரு குழுவாக தங்களது உடல் வலு திறனை காட்டினர்.

இப்போட்டியில் பங்கேற்க ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள, ராமேஸ்வரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர், கமுதி ஆகிய பகுதிகளில் இருந்து 800க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, அனைத்து பிரிவுகளிலும் நடைபெற்ற போட்டியில் முதல் 5 இடங்களை பிடித்தவர்களுக்கு சீல்டுகள், சான்றிதழ், கோப்பைகள், மெடல்கள் உள்ளிட்டவை பரிசுகளாக வழங்கப்பட்டது.

இதையும் படிங்க : ராமநாதபுரத்தில் புத்துயிர் பெற்று வரும் மல்லர் கம்பம் விளையாட்டு.. ஆர்வத்துடன் பயிற்சி பெரும் மாணவர்கள்..

ஆணழகன் போட்டியில் 6 பிரிவிலும் முதல் இடங்களை வென்ற சாம்பியன்களை ஒருங்கிணைத்து அவர்களுக்குள் ஒரு போட்டி நடத்தப்பட்டு சாம்பியன் ஆப் சாம்பியன் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு மிஸ்டர் ராம்நாடு பட்டம் வழங்கப்பட்டது.

இப்போட்டியில் முதல் பரிசு பெற்று வெற்றி பெற்றவர் விவரம், பள்ளி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற சப்ஜீனியர் பிரிவில் தொண்டியைச் சேர்ந்த அபிஷேக் பெற்றார். 55 கிலோ எடை பிரிவில் ராகுல் டிராவிட் ராமநாதபுரம் பெற்றார்.

இதையடுத்து, 60 கிலோ எடை பிரிவில் சபரி ராமநாதபுரம் பெற்றார். 65 கிலோ எடை பிரிவில் ஹரிபாஸ்கர் ராமநாதபுரம் பெற்றார். 70 கிலோ எடை பிரிவில் விக்னேஸ்வரன் ராமேஸ்வரம் பெற்றார். 75 கிலோ எடை பிரிவில் முகம்மது ரபீக் ராமநாதபுரம் பெற்றார். 75 கிலோ மேற்பட்டவர்களுக்கான போட்டியில் மதன் ராஜ் பெற்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பெற்றவர்களுக்கு நடைபெற்ற இறுதி போட்டியில் சாம்பியன் ஆஃப் சாம்பியனாக ராமேஸ்வரத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram