முகப்பு /ராமநாதபுரம் /

பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் 20வது பட்டமளிப்பு விழா.. கலெக்டரிடம் பட்டம் வாங்கிய மாணவர்கள்..

பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் 20வது பட்டமளிப்பு விழா.. கலெக்டரிடம் பட்டம் வாங்கிய மாணவர்கள்..

X
பட்டமளிப்பு

பட்டமளிப்பு விழா

Ramanathapuram News : பரமக்குடி அரசு கலைக்கல்லூரி 2020-2022ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு 20ஆவது பட்டமளிப்பு விழாவானது நடைபெற்றது. இதில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டங்களை வாங்கி மகிழ்ந்தனர். 

  • Last Updated :
  • Ramanathapuram, India

பரமக்குடி அரசு கலைக்கல்லூரி 2020-2022 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு 20ஆவது பட்டமளிப்பு விழாவானது நடைபெற்றது. இதில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டங்களை வாங்கி மகிழ்ந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசினர் கலைக்கல்லூரியானது 20 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு பரமக்குடி மட்டுமில்லாமல் ராமநாதபுரம் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 2,800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், 2020-2022ஆம் கல்வியாண்டில் கல்விபயின்ற மாணவ-மாணவிகளுக்கு 20ஆவது பட்டம் அளிக்கும் நிகழ்ச்சியானது பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இதையும் படிங்க : தொடர் விடுமுறை.. கொடைக்கானலுக்கு படையெடுக்கும் மக்களால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்!

இந்த பட்டமளிப்பு விழாவில், கல்லூரி முதல்வர் மேகலா தலைமை வகித்தார். விழாவில் 600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பட்டங்களை வாங்கி மகிழ்ந்தனர். பட்டங்களை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் ஜானிடாம் வர்கீஸ் மாணவர்களுக்கு வழங்கி வாழ்த்தினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் முன்னாள் மாணவ, மாணவிகள் மாணவர்களின் பெற்றோர்கள் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர், கவுரவ விரிவுரையாளர்கள் ஊள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    First published:

    Tags: Local News, Ramanathapuram