முகப்பு /ராமநாதபுரம் /

ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்பு.. பரமக்குடி அருகே சோகம்.. 

ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்பு.. பரமக்குடி அருகே சோகம்.. 

X
ஆட்டோ

ஆட்டோ மீது அரசு பேருந்து மோதல்

Ramanathapuram News : பரமக்குடியில் அருகே உள்ள மேலாய்குடி கிராமத்தில் சாலையில் சென்ற ஆட்டோ மீது கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ராம்நகர் மற்றும் வெங்கடேஸ்வரா காலனியை சேர்ந்த இளைஞர்கள் ரஞ்சித் மற்றும் கோகுல், இவர்கள் இருவரும் முதுகுளத்தூர் சாலையில் ஆட்டோ ஓட்டிக்கொண்டு பரமக்குடி நோக்கி சென்றுள்ளனர். இந்நிலையில், ஆட்டோ பரமக்குடி அருகே உள்ள மேலாய்க்குடி என்ற கிராமத்தின் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஆட்டோ மீது எதிரே வந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் கோகுல் மற்றும் ரஞ்சித் ஆகிய 2 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து, உயிரிழந்த இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து எமனேஸ்வரன் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

First published:

Tags: Local News, Ramanathapuram