ஹோம் /ராமநாதபுரம் /

பிரிட்டிஷ் காலத்திய பாம்பன் தேவாலயமும் எதிரே இருக்கும் அதிசய மணியின் வரலாற்று சிறப்பும்..

பிரிட்டிஷ் காலத்திய பாம்பன் தேவாலயமும் எதிரே இருக்கும் அதிசய மணியின் வரலாற்று சிறப்பும்..

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

British Era Church in Pamban | ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் பகுதியில் உள்ள தெற்குவாடியில் அமைந்துள்ள  சி.எஸ்.ஐ தூய‌ மார்க் தேவாலயம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram

ராமநாதபுரம் மாவட்டம்  பாம்பன் தெற்குவாடியில் 18ம் நூற்றாண்டில்  ஆங்கிலேயரால் கட்டப்பட்டதேவாலயத்தில் உள்ள தொன்மையான மணியானது  5 நாட்டிக்கல் மைல் தூரம் ஒலி எழுப்பக்கூடிய ஓசை உடையதாக உள்ளது. இது வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த மணியாக விளங்குகிறது.

ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் பகுதியில் உள்ள தெற்குவாடியில் அமைந்துள்ள  சி.எஸ்.ஐ தூய‌ மார்க் தேவாலயம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. பின்னர் இந்த தேவாலயம் சேதமடைந்ததால் அப்பகுதி மக்களால் மீண்டும் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தின் முன்பு உள்ள மணி ஆனது, ஆங்கிலேயர்களால் 18 ஆம் நூற்றாண்டில் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டு நிறுவப்பட்டதாகும். இந்த மணியை மீட்டி ஒலி எழுப்பினால் அந்த ஓசை  5 நாட்டிக்கல் மைல் தூரம் வரை கேட்கக்கூடியதாக உள்ளது.

மேலும் படிக்க: ராமேஸ்வரம் முதல் கேதார்நாத் வரை இந்தியாவின் முக்கிய சிவாலயங்கள் இதோ..!

இந்த தேவாலயத்தில் திருப்பலியின் போது மணியில் இருந்து எழும் ஒலியை வைத்து ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் கடலுக்குள்ளேயே பிரார்த்தனை செய்து கொள்வார்களாம்.

பழமைவாய்ந்த மணி

மேலும் இந்த தேவாலயத்தின் அருகே ஆங்கிலேயரால் பள்ளி நிறுவப்பட்டது, இப்பள்ளியானது பாம்பன் பகுதியில் அமைக்கப்பட்ட முதல் பள்ளி ஆகும். மீனவர்களின் குழந்தைகள் கல்வி பயல வேண்டும் என்பதற்காக நிறுவப்பட்டது.

மேலும் படிக்க: தனுஷ்கோடிக்கு சுற்றுலா போறீங்களா..! மறக்காம இதை எல்லாம் பார்த்துட்டு வாங்க..!

100 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த தேவாலயமானது, நவம்பர் 5-ம் தேதி 1991-ம் ஆண்டு மழை பெய்தபோது இடி மின்னல் தாக்கி சேதமடைந்து. அதன்‌ பின்னர் சேதமடைந்த தேவாலயம் 2005-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

மேலும், ஆங்கிலேயரால் நிறுவப்பட்ட மணியானது, சிறிது காலம் பயன்பாட்டில் இல்லாமல் சேதமடைந்து இருந்ததையடுத்து , பாம்பன் பாலத்தில் வேலை செய்யக்கூடியவர்களை வைத்து பாரமரிக்கப்பட்டது, அதன் பிறகு மணியின் ஓசை குறைந்த அளவே வருகிறது.

மேலும் படிக்க:  35-வது ஆண்டை தொடங்கியுள்ள பாம்பன் பாலத்தின் சிறப்புகள்

இதன் பிறகு ராமேஸ்வரத்தில் இருக்கக்கூடிய இரும்பு லேத்தில் இருந்து வேலையாட்கள் வரவைத்து மணியை சக்கரம் பொருத்தி கீழிருந்து இயக்குமாறு பயன்படுத்தப்பட்டுள்ளது. எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் ஆங்கிலேயரால் வைக்கும்போது இருந்த ஓசை வரவில்லை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த தேவாலயம் பாம்பன் பகுதியில் இருந்த விசித்திரமான தோற்றம் கொண்ட தேவாலயமாக இருந்துள்ளது. ஆங்கிலேயர் வெளிநாடுகளில் இருப்பது போன்ற அமைப்பை உருவாகி கட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram