ஹோம் /ராமநாதபுரம் /

பரமக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை ஏமாற்றி 17 சவரன் நகை, பணம் கொள்ளை

பரமக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை ஏமாற்றி 17 சவரன் நகை, பணம் கொள்ளை

வீட்டின் பீரோ உடைக்கப்பட்டுள்ளது.

வீட்டின் பீரோ உடைக்கப்பட்டுள்ளது.

Paramakudi | பரமக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை ஏமாற்றி பீரோவில் இருந்த 17 சவரன் தங்க நகைகளை திருடி சென்றவர்களை நகர் காவல் நிலைய காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

பரமக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை ஏமாற்றி பீரோவில் இருந்த 17 சவரன் தங்க நகைகளை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நாகர்கோவிலை சேர்ந்த போற்றிராஜா மகன் ராஜசேகர். இவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனியார் நிதி நிறுவன மேலாளராக பணியாற்றி வருகிறார்.  இவரது மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊருக்கு சென்ற நிலையில் மனநிலை பாதித்த தாயார் தங்கம்மாள் வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில், ராஜசேகர் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டிற்கு வந்த ஒருவர் தங்கம்மாளிடம் தண்ணீர் கேட்பது போல் நடித்து, அவரை திசை திருப்பி பீரோவை திறந்து அதிலிருந்து 17 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 70 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளார்.

இதையும் படிங்க : தீபாவளியன்று கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் - ராமநாதபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

இதையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மோப்பநாய் ஜூலி திருடு போன இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் தொட்டிச்சி அம்மன் காலனி வரை சென்று நின்றுவிட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுகுறித்து ராஜசேகர் கொடுத்த புகாரையடுத்து இச்சம்பவம் குறித்து பரமக்குடி நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்ட பகலில் மூதாட்டியை ஏமாற்றி 17 சவரன் தங்க நகை மற்றும் பணத்தை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram