ஹோம் /ராமநாதபுரம் /

வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 1,500 கிலோ மஞ்சள் பறிமுதல் - காவல்துறை தீவிர விசாரணை 

வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 1,500 கிலோ மஞ்சள் பறிமுதல் - காவல்துறை தீவிர விசாரணை 

X
பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள்

Ramanathapuram Latest News | ராமநாதபுரம் மாவட்டம் வேதாளையிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 1,500 கிலோ மஞ்சளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம்  வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 1,500 கிலோ சமையல் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கடலோர காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

ராமேஸ்வரம், தனுஷ்கோடி, மண்டபம், வேதாளை ஆகிய பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டை, கஞ்சா, காலணிகள், சமையல் மஞ்சள் ஆகியவை அதிகளவில் தொடர்ந்து இலங்கைக்கு  கடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வேதாளை பகுதியில் இருந்து தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக சமையல் மஞ்சள் கடத்த இருப்பதாக மண்டபம் கடலோர காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

மேலும் படிக்க : கன்னியாகுமரிக்கு டூர் போறீங்களா? அழகான இந்த அருவியை மிஸ் பண்ணாதீங்க!

இதையடுத்து, வேதாளை பகுதிக்கு விரைந்து ரோந்து சென்ற மண்டபம் மரைன் காவல்துறையினர் வேதாளை துறைமுகத்தில் வாகனம் ஒன்றில் இருந்து சமையல் மஞ்சள் மூட்டை மூட்டையாக பதிவு எண் இல்லாத நாட்டுப்படகில் மஞ்சளை ஏற்றி உள்ளனர்.

மரைன் காவல்துறையினரை பார்த்துவிட்டு அங்கிருந்து பத்திற்கும் மேற்பட்டோர் தப்பி ஓடிவிட்டனர். சரக்கு வாகனம், நாட்டுப் படகு, 1500 கிலோ உடைய மஞ்சள், கடத்தல் பொருட்கள் அனைத்தையும் மண்டபம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து, தப்பித்து ஓடிய கடத்தல்காரர்களை பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், வேதாளை ஊராட்சியில் இருந்து அடிக்கடி கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்வது வாடிக்கயான ஒன்றாக திகழ்கிறது. இதனால் கடற்கரையில் ஓரத்தில் காவலர்கள் பணியில் அமர்த்தினால் இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் குறையும்.

First published:

Tags: Crime News, Local News, Ramanathapuram, Rameshwaram