ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரம் மீன் மார்க்கெட்டில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்..  உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி நடவடிக்கை..

ராமேஸ்வரம் மீன் மார்க்கெட்டில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்..  உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி நடவடிக்கை..

ராமேஸ்வரம் மீன் மார்க்கெட்

ராமேஸ்வரம் மீன் மார்க்கெட்

Ramanathapuram District | ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் மார்க்கெட்டில் விற்கப்படும் மீன்களில் பார்மாலின் என்ற ரசாயனம் கலந்து விற்கப்படுவதாகவும். மேலும், கெட்டுப்போன மீன்களை விற்பதாகவும் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் எழுந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தினசரி மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரசாயனம் கலந்த 15 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்.

மீன்களானது விரைவில் கெட்டுப்போகும் தன்மை உடையது இதனால் கடலில் பிடிக்கப்படும் மீன்களை மீனவர்கள் ஐஸ் கட்டிகளுடன் வைத்து கரைக்கு கொண்டு வந்து விற்கின்றனர்.

மீனவர்களிடமிருந்து மீன் வாங்கும் வியாபாரிகள் விற்பனையில் ஈடுபடும் முன்பு அதில் பார்மாலின்  என்ற ரசாயனத்தை தடவுகின்றனர். இப்படி செய்வதால் மீனானது 15 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இவ்வாறு ரசாயனம் கலந்த மீன்களை உண்பதால் உடலில் புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்தான நோய்கள் ஏற்படக்கூடும்.

ராமநாதபுரத்தில் பிடிக்கப்படும் மீன்களில் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் போது பார்மாலின் என்ற ஒரு விதமான ரசாயனத்தை கலந்து விற்கப்படுவதாகவும். மேலும், கெட்டுப்போன மீன்களை விற்பதாகவும் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் எழுந்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதையடுத்து, தினசரி மார்க்கெட்டிற்க்கு சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அங்கு மொத்த வியாபாரிகளிடம் இருந்த மீன்களை சோதனை செய்தனர்.

இந்த ஆய்வில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்க்கப்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஆய்வில் 15-கிலோ விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இனிமேல் கெட்டுப்போன மீன்கள் மற்றும் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வியாபாரிகளை எச்சரித்தனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram, Rameshwaram