ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதசுவாமி கோயிலில் உழவாரப்பணி மேற்கொண்ட 1300 சிவனடியார்கள் 

ராமநாதசுவாமி கோயிலில் உழவாரப்பணி மேற்கொண்ட 1300 சிவனடியார்கள் 

உழவார பணி மேற்கொண்ட சிவனடியார்கள்

உழவார பணி மேற்கொண்ட சிவனடியார்கள்

Ramanathapuram District News : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் உள்புறம் மற்றும் வெளிப்புற பகுதியில் உழவாரப்பணி மேற்கொண்டு வரும் 1300-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள், இப்பணியானது இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் உள்புறம் மற்றும் வெளிப்புற பகுதியில் உழவாரப்பணி மேற்கொண்டு வரும் 1300-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள், இப்பணியானது இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் உலக பிரசித்தி பெற்ற முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகும். இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி விட்டு பின்பு ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புனித தீர்த்த கிணறுகளில் புனித நீராடி பின் சுவாமி தரிசனம் செய்வது வழக்கமான ஒன்றாகும்.

உழவார பணி மேற்கொண்ட சிவனடியார்கள்

இந்நிலையில், திருக்கோயிலுக்கு வரம் பக்தர்கள் விட்டுச்செல்லும் பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள், பழைய துணிகள் உள்ளிட்டவைகள் ஆங்காங்கே தேங்கியுள்ளது, மேலும் நந்தவனம் பகுதியில் அதிகளவில் புதர் மண்டி கிடப்பதால் அதை சுத்தம் செய்ய சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கக்கூடிய நமசிவாய உழவார பணியைச் சேர்ந்த சுமார் 1300-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் ராமேஸ்வரம் வந்தனர்.

இதையும் படிங்க : நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்த ஊர் இதுதானா..! - எந்த மாவட்டத்தில் இருக்கிறது தெரியுமா?

தொடர்ந்து இரண்டு நாட்கள் அவர்கள் கோயில் எதிரே உள்ள அக்னி தீர்த்த கடற்கரை, கடற்கரையில் தேங்கியுள்ள பக்தர்கள் விட்டு செல்லும் துணிகள், பாசிபடிந்த படிகள் சுத்தம் செய்து ஒவ்வொரு குழுவாக பிரிந்து திருக்கோயில் உள்வளாகம், நந்தவனம், கோசாலை பகுதிகளை சுத்தம் செய்தனர்.

உழவார பணி மேற்கொண்ட சிவனடியார்கள்

மேலும் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான உபகோயில்களான ராமர் பாதம், கோதண்டராமர் கோயில், ராமர் தீர்த்தம், லெட்சுமண தீர்த்தம், ஜடாயு தீர்த்தம் ஆகிய பகுதியில் உழவாரப்பணியில் ஈடுபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Ramanathapuram