முகப்பு /ராமநாதபுரம் /

கருவேலமரத்தில் மறைந்திருந்த 12 அடி நீள மலைப்பாம்பு.. அலேக்காக பிடித்து ராமநாதபுரம் வனத்துறையிடம் ஒப்படைப்பு!

கருவேலமரத்தில் மறைந்திருந்த 12 அடி நீள மலைப்பாம்பு.. அலேக்காக பிடித்து ராமநாதபுரம் வனத்துறையிடம் ஒப்படைப்பு!

X
கருவேலமரத்தில்

கருவேலமரத்தில் மறைந்திருந்த 12 அடி நீள மலைப்பாம்பு

12 Feet Long Python : பரமக்குடி அருகே கருவேலம் மரத்தில் மறைந்திருந்த 12 அடி நீளம் உடைய மலைபாம்பை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள உரப்பலி கிராமத்தில் உள்ள செங்கல் சூளை அருகே மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று சுற்றி திரிவதாக அப்பகுதி மக்கள் பரமக்குடி தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், அங்கு விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர் அந்த இடத்தில் சென்று பார்த்தபோது சுமார் 12 அடி நீளம் உடைய மலைப்பாம்பு இருப்பதை கண்டறிந்து உறுதி செய்தனர்.

இதையடுத்து, கருவேல மரங்களில் மறைந்திருந்த 12 அடி நீளம் உள்ள, அந்த மலைப்பாம்பை தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வறட்சி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் மலைப்பிரதேசங்களில் வாழக்கூடிய மலைப்பாம்பானது மழைக்காலத்தில் வைகை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வந்தபோது நீரில் அடித்து பரமக்குடி பகுதியில் வந்திருக்கலாம் என தீயணைப்புதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்தப் பகுதியில் மலைப்பாம்பு பிடிபட்டது இதுவே முதல்முறை என்றும் சொல்லப்படுகிறது. பிடிபட்ட மலைப்பாம்பினை மலைப்பிரதேசங்களில் விடப்பட இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram