முகப்பு /ராமநாதபுரம் /

109 ஆண்டுகள் கடந்த பாம்பன் ரயில் பாலம் நினைவு சின்னமாக அறிவிக்கப்படுமா?

109 ஆண்டுகள் கடந்த பாம்பன் ரயில் பாலம் நினைவு சின்னமாக அறிவிக்கப்படுமா?

X
பாம்பன்

பாம்பன் பாலம்

Rameshwaram Pamban Bridge | தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு வர்த்தகம் செய்ய பாம்பன் கடலில் நடந்து தான் செல்ல வேண்டும், அப்போது கப்பல் போக்குவரத்து மட்டுமே இருந்தது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகள் வளர்ச்சி அடைய பெரும் உதவியாக பாம்பன் ரயில் பாலம் 109 ஆண்டுகள் கடக்கும் நிலையில் புதிய பாலம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, பழைய பாலத்தினை அப்புறப்படுத்தாமல் நினைவு சின்னமாக அறிவித்து சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கவேண்டும் என்று பாம்பன் மற்றும் தீவு பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவை தமிழத்தின் நிலப்பரப்போடு மண்டபம் வழியாக இணைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது பாம்பன் பாலம். ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் முதல் உள்ளூர் பொதுமக்கள் வரை தினந்தோறும் கிட்டத்தட்ட50,000 பேர் ரயில் பாலத்தினை பயன்படுத்தி வருகின்றனர்.

வர்த்தக நகரம் தனுஷ்கோடி:

1800-ம் ஆண்டுகளில்தனுஷ்கோடியானது மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்கியது, அப்போது தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு வர்த்தகம்செய்ய பாம்பன் கடகைகடந்து தான் செல்ல வேண்டும், அப்போது கப்பல் போக்குவரத்து மட்டுமே இருந்தது இயற்கை சீற்றங்களின் போது எவ்வாறு பாம்பன் கால்வாயை கடந்து செல்வது கடினம்.

இதனால் பிரிட்டிஷ்காரர்கள் பாம்பம் பகுதிகடலில் ரயில் பாலம் அமைக்க முடிவு செய்தனர். மேலும், பாம்பன் ராமேஸ்வரம் பகுதியில் கடலில் பிடிபடும் மீன்களை வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய வியாபாரம் நோக்கத்தோடு அமைக்க முடிவு செய்தனர்.

ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் பாலம்:

இதற்கு அமெரிக்க நாட்டின்பொறியாளர் வில்லியம் ஷெர்ஸர் என்பவர் ரயில் பாலம் உருவாக்க வடிவமைத்தார். இதன் பின் 1902-ம்‌ ஆண்டு கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டது. கடலில் ரயில் பாலம் அமைக்க ரூ‌. 70 லட்சம் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் நீளம் 2.3 கிலோமீட்டர் தொலைவு வரை அமைக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் 146 தூண்கள் அமைக்கப்பட்டு, 145 கர்டர்கள் பொருத்தப்பட்டன. இப்பணியானது 11 ஆண்டுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. பின்பு 1913-ம் ஆண்டு ஜுலை மாதம் தண்டவாளம் அமைக்கும் பணியனாது தொடங்கப்பட்டு டிசம்பர் மாதத்தில் நிறைவு பெற்றது.

பிரம்மாண்ட தூக்கு பாலம்:

பாம்பன் கால்வாய் வழியாக வணிகத்திற்கு வரும் கப்பல் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி, ரயில் பாலத்தினைகடந்து செல்ல தூக்கு பாலமானது கடலுக்குள் இரண்டு பகுதிகளில் பெரிய தூண்கள் அமைக்கப்பட்டு 80 டிகிரி கோணத்தில் திறந்து மூடும் வகையில் இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டு தூக்குபாலம் அமைக்கப்பட்டது.

இறுதியாக 1914-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வணிக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் இதில் செல்ல பொதுமக்கள் பயந்ததாக கூறப்படுகிறது, பின்பு சிறிது சிறிதாக மக்கள் சென்று பயணிக்க ஆரம்பித்தனர்.

ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்:

இந்த ரயில் பாலத்தில் இரும்புகள் கடல் அரிப்பால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க அலுமினியம் மெட்டல் என்ற பெயிண்டானது அடிக்கப்படுகிறது. புயல், சுனாமி இயற்கை பேரிடர்களை தாங்கி செயல்பட்டு கொண்டிருந்த பாலமானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவையானது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதில் இருந்து ரயில் சேவை இல்லாததால் பொதுமக்கள், மீனவர்கள், மற்றும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் சிரமம் அடைகின்றனர்.

நினைவுச் சின்னம்:

புதிய ரயில் பாலம் திறக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடரும்போது தான் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், அக்காள் மடம், தனுஷ்கோடி பொதுமக்கள் ரயில் சேவை தொடங்கும். மேலும் புதிய பாலத்தினை திறந்த பிறகு இந்த‌ பாலத்தினை உடைத்து விடாமல் தீவு மக்களுக்கு பெரும் உதவியாக இருந்ததை நினைவு சின்னமாக அறிவித்து இங்கு இனிமேல் தினந்தோறும் வரும் சுற்றுலா பயணிகள், அதனை கண்டு பாலத்தின் பெருமைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்று தீவு மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram