ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆதஞ்சேரி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் புதிய கட்டிடம் கட்டித் தரவேண்டும் என்று மாணவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஆதஞ்சேரி கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தகிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் 70 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர்.
40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய சேதமடைந்த பள்ளி கட்டிடத்தில்தான் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டுவருகிறது. தற்போது, பள்ளி கட்டிடமானது சேதமடைந்து உள்ளதால் அச்சத்துடன் கல்வி பயின்று வருகின்றனர் மாணவ, மாணவிகள்.
இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிதாக வகுப்பறை கட்டிடம் கட்டி தரக்கோரி பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழக முதல்வர் தனிப்பிரிவு ஆகியோருக்கு ஆதஞ்சேரி கிராமத்தின் பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், கிராம பொது மக்கள் சார்பில் பலமுறை புகார் மனுக்களை அளித்தும் எந்த பயனும் இல்லை என்று கூறுகின்றனர்.
இதையடுத்து, இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கை இல்லாத நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள், அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்பு பேஜ் அணிந்து குழந்தைகளுக்கும் கருப்பு பேஜ் அனுவித்து பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
ராமநாதபுரம் | புதிய பள்ளிக் கட்டிடம் கோரி கருப்பு பேட்ஜ் அணிந்த பள்ளி மாணவர்கள்
செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram