ஹோம் /ராமநாதபுரம் /

“வாழவே வழியில்லை.. உயிரை பணயம் வைத்து வந்தோம்” - இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த 10 ஈழ தமிழர்கள் குமுறல்..

“வாழவே வழியில்லை.. உயிரை பணயம் வைத்து வந்தோம்” - இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த 10 ஈழ தமிழர்கள் குமுறல்..

தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த ஈழ தமிழர்கள்

தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த ஈழ தமிழர்கள்

Ramanathapuram District News : இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அகதிகளாக செல்லும் அவலநிலை தொடர்ந்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மேலும் 10 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்திறங்கினர். அவர்களை கடலோர காவல்துறையினர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியினால், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பாலும் அங்கு வாழ வழியின்றி தனுஷ்கோடி வழியாக தமிழகம் வந்து அகதிகளாக தஞ்சமடைகின்றனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு இலங்கை தமிழர்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், நேற்று இரவு இலங்கையில் உள்ள வவுனியாவில் இருந்து பைபர் படகு மூலம் புறப்பட்டு இரண்டு குடும்பத்தே சேர்ந்த மூன்று சிறுவர்கள் உட்பட 10 பேர் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.

இதையடுத்து, தனுஷ்கோடியில் இருந்து அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை செய்த பிறகு, மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்க உள்ளனர்.

இதையும் படிங்க : அமாவாசை இரவில் நிர்வாண பூஜை.. 8வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - சிக்கிய சாமியார்

இதுகுறித்து பேசிய அகதிகளாக வந்த ஈழத் தமிழர்கள், “அத்தியாவசிய பொருட்களான சர்க்கரை, அரிசி, பால், கோதுமை, பருப்பு போன்றவை கடுமையாக விலை உயர்ந்துள்ளது. கையில் பணம் இருந்தாலும் அந்த பொருட்களை வாங்க தட்டுப்பாடு நிலவுகிறது.

நாளுக்கு நாள் மோசமான நிலை நிலவிவருகிறது. பெட்ரோல், டீசலின் விலையும் விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளதால் மீன்பிடிக்க கூட செல்ல‌முடியாத விலை உள்ளது. கூலித் தொழில் செய்து பிழைக்க கூட வழியில்லை.

இலங்கையில் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து உயிரை பணயம் வைத்து பைபர் படகில் 50,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரையில் படகிற்கு கொடுத்து தமிழகத்திற்கு வந்துள்ளோம்" என்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து அகதிகளாக 208 பேர் தனுஷ்கோடி வழியாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram