ஹோம் /ராமநாதபுரம் /

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1.64 கோடி‌ மதிப்பு கடல் அட்டைகள் பறிமுதல்... கடலோர காவல்படை அதிரடி... 

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1.64 கோடி‌ மதிப்பு கடல் அட்டைகள் பறிமுதல்... கடலோர காவல்படை அதிரடி... 

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள்

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள்

Ramanathapuram | மண்டபம் கடற்கரையில் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் பதுக்கி வைத்திருந்த ஒருகோடி அறுபத்து நான்கு லட்சம் மதிப்பிலான 410 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல், கடத்தல்காரர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

மண்டபம் கடற்கரையில் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் பதுக்கி வைத்திருந்த ஒரு கோடி அறுபத்து நான்கு லட்சம் மதிப்பிலான 410 கிலோ கடல் அட்டைகளை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்து கடத்தல்காரர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரையிலிருந்து கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்துவதற்காக நாட்டுப்படகில் கடல் அட்டைகளை ஏற்றுவதாக கடலோர காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, கடலோர காவல்படையினர் மண்டபம் வடக்கு கடற்பகுதியில் ஹோவர் கிராஃட் படகில் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் ரோந்து சென்றனர்.

இந்நிலையில், மண்டபம் வடக்கு கடற்பகுதியில் கடலோர காவல்படையினரின் ஹோவர் கிராஃட் ரோந்து படகை பார்த்ததும் கடல் அட்டைகளை படகில் ஏற்றிக்கொண்டு கரையில் நின்று கொண்டிருந்தவர்கள் கடல் அட்டைகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினர்.

இதையும் படிங்க : பசும்பொன் தேவர் நினைவிடத்தில் “எடப்பாடி ஐயா வாழ்க” கோஷம்.. அதிமுகவினருக்கு எதிராக திரண்ட மக்கள்

இதையடுத்து, அங்கு விரைந்து சென்று கடலோர காவல்படையினர் படகில் இருந்த சாக்குகளை சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட 410 கிலோ கடல் அட்டைகள் இருந்துள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ.1.64 கோடி.

பறிமுதல் செய்த கடல் அட்டைகளை கடலோர காவல்படையினர் மண்டபம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும், கடத்தல்காரர்கள் குறித்து வனத்துறையினரும், மண்டபம் காவல்துறையினரும் விசாரணை செய்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த கடல் அட்டையின் மொத்த மதிப்பு  ஒரு கோடி அறுபத்து நான்கு லட்சம் இருக்கும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Published by:Karthi K
First published:

Tags: Crime News, Local News, Ramanathapuram