முகப்பு /ராமநாதபுரம் /

கண்டெய்னர் லாரியில் 4,480 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்.. பரமக்குடி அருகே போலீசாரிடம் சிக்கிய கடத்தல்கார்கள்..

கண்டெய்னர் லாரியில் 4,480 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்.. பரமக்குடி அருகே போலீசாரிடம் சிக்கிய கடத்தல்கார்கள்..

X
கண்டெய்னர்

கண்டெய்னர் லாரியில் 4,480 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்

Ramanathapuram News | பரமக்குடியில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையில் மேலாய்க்குடி கிராமத்தில் கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கண்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 4.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து இருவரை கைது செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுதுறை காவல்துறையினர் கடத்தல்காரர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுதுறை காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி பரமக்குடியில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையில் மேலாய்க்குடி கிராமத்தில் கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த லாரியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறையினர் சோதனை செய்ததில் 112 பிளாஸ்டிக் பைகளில் 40 கிலோ எடை உடைய 4,480 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

மேலும், ரேஷன் அரிசியை கடத்திய மேலாய்க்குடியைச் சேர்ந்த பழனிமுருகன் மற்றும் கடலாடியைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Local News, Ramanathapuram