முகப்பு /புதுக்கோட்டை /

காளான் வளர்ப்பில் இவ்வளவு லாபம் கிடைக்குமா? புதுக்கோட்டை இளைஞர் சொன்ன பிசினஸ் ஐடியா!

காளான் வளர்ப்பில் இவ்வளவு லாபம் கிடைக்குமா? புதுக்கோட்டை இளைஞர் சொன்ன பிசினஸ் ஐடியா!

X
காளான்

காளான் வளர்ப்பில் இவ்வளவு லாபம் கிடைக்குமா?

Mushrooms Cultivation : காளான் வளர்ப்பில் புதுக்கோட்டை இளைஞர் சாதித்து வருகிறார்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

மற்ற உயிர்களை சார்ந்து வாழும் ஒட்டுண்ணிகளான பூஞ்சை தாவரம் தான் காளான். இந்த காளான்கள் பல வகைப்படும் என்றாலும் உணவாக உட்கொள்ளும் காளான் வகைகளின் எண்ணிக்கை குறைவுதான். இந்தியாவில் வெறும் 2% தான் இவை பயிர் செய்யப்படுகிறது. சீனாவில் தான் உலகின் மொத்த காளான் உற்பத்தியில் 75% உள்ளது. அனைத்து நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவாக காளான்கள் தற்போது மாறிவிட்டது. காய்கறிகளின் சமையல் உலகில் காளான்கள் இறைச்சியாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. தற்போது சந்தைகளில் விற்கப்படும் பல வகையான காளான்கள் வர்த்தக ரீதியில் பண்ணைகளில் வளர்க்கப்பட்டவை தான். அப்படிப்பட்ட காய்கறி உலகின் இறைச்சியாகிய காளான்களை வளர்ப்பது எப்படி தெரியுமா? தெளிவாக விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

காளான் வளர்ப்பு முறை :

புதுக்கோட்டை சாங்கிராப்பட்டியில் 22 காளான் பண்ணைகள் வைத்துள்ள வெங்கடேசன், காளான் வளர்ப்பு முறைகள், சந்தைப்படுத்துவது மற்றும் லாபம் குறித்து நம்மிடம் விளக்குகிறார். இதுகுறித்து பேசிய அவர், 'காளான்களில் பல வகைகள் உள்ளன. அதில் பால் காளான் எனப்படும் வகையை தான் நான் தற்போது வளர்க்கிறேன். இந்த காளான் வளர்ப்பிற்கு மூலப்பொருளாக இருப்பது வைக்கோல் தான். முதலில் அதை 2 இன்ச் அளவிற்கு வெட்டிக் கொள்ள வேண்டும். அதன் பின் அதை ஊற வைக்க வேண்டும்.

அதாவது இயற்கை முறையில் வைக்கோலை வேக வைத்து மூட்டையாக கட்டி ஊற வைப்பது, செயற்கை முறையில்கார்பன், மற்றும் பார்மலின் இவற்றை தண்ணீரில் கலந்து 20 மணி நேரம் ஊற வைத்த பின் அதனை பயன்படுத்தலாம். அதன் பின் வைக்கோலை நிழலில் உலர்த்த வேண்டும். 55 சதவீதம் ஈரப்பதம் இருக்குமாறு அதனை தயார் செய்து கொள்ள வேண்டும்.அதன் பின்னர் காளான் படுக்கை தயார் செய்வதற்கு தேவையான பிளாஸ்டிக் பையை எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக 14 க்கு 25 என்ற அளவில் உள்ளபையில் 2 சென்டிமீட்டர் வைக்கோல் இட்டு 10 லிருந்து 15 கிராம் அளவு விதை போட வேண்டும். அதேபோல் 10 முதல் 11 லேயர் வைக்கோலை போட்டு பின் முடிவில் விதை போட்டு விட்டு அதனை கட்டி விட வேண்டும்.

எவ்வளவு லாபம் கிடைக்கும் :

அதன் பின்னர் பையை சுற்றி துளை இட வேண்டும். பின்னர் அதனை பக்குவப்படுத்த டார்க் ரூமில் வைத்து விட வேண்டும். மீண்டும் 20 நாட்களுக்கு பின் ஹார்வஸ்ட் ரூமில் அந்த காளான் படுக்கையை வெட்டி அந்த அறையில் வண்டல் மண் எடுத்து அதில் வேறு பூஞ்சை இல்லாதவாறு அதை ஆவியில் அவிக்க வேண்டும். அதன் பின் வெட்டப்பட்ட காளான் படுக்கையில் அந்த மணலை மேற்பூச்சு இட வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

16 நாட்கள் கழித்து காளான் பட்ஸ் வந்துவிடும். அதன் பின்னர் 4 நாட்களில் காளான் வளர்ந்து அறுவடைக்கு தயாராகிவிடும். அதனை அறுவடை செய்து சுத்தப்படுத்தி சந்தைப்படுத்தலாம். இதற்கான சந்தைப்படுத்துதல் என்பது கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்கள் முதல் திருச்சி, மதுரை போன்ற மாவட்டங்கள் வரையிலும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த காளான் 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனையும் செய்யலாம். மேலும் மாதத்திற்கு 20,000 ரூபாய் முதல் நாம் காளான் படுக்கை அமைக்கும் அளவுக்கு ஏற்ப லாபம் பெறலாம்” என்றார்.

First published:

Tags: Local News, Pudukkottai