ஹோம் /புதுக்கோட்டை /

10ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு புதுக்கோட்டையில் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

10ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு புதுக்கோட்டையில் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

10ம் வகுப்பு தேர்வு

10ம் வகுப்பு தேர்வு

Pudukkottai District | புதுக்கோட்டையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் வரும் 25ம் தேதிக்குள் அறிவியல் பாடத்தில் செய்முறை தேர்வுகளுக்கு விண்ணக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

புதுக்கோட்டையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் வரும் 25ஆம் தேதிக்குள் அறிவியல் பாடத்தில் செய்முறை தேர்வுகளுக்கு விண்ணக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் பிச்சை முத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

இந்தாண்டுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித்தேர்வர்கள் ( முதல் முறையாக அனைத்து தேர்வுகளையும் எழுதுவோர்) , ஏற்கனவே கடந்தாண்டு தோல்வி அடைந்தவர்களும், இந்த பயிற்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் வரும் 25ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்த பின்னர் சேவை மையத்தால் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வுக் கூட அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும்.

10ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் மாவட்டக் கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிகளுக்கு சென்று செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும்.

விண்ணப்ப படிவம் பயிற்சி வகுப்புகளுக்கு 80 சதவீத வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே 10ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு அனுமதிக்கப்படுவர். இதற்கான விண்ணப்ப படிவத்தினை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

மேலும், அதில் விவரங்களை பூர்த்தி செய்து 2 நகல் எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களிடம் தனித்தேர்வர்கள் வரும் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: 10th Exam, Coimbatore, Local News