முகப்பு /புதுக்கோட்டை /

”பெண்கள் பொருளாதார சுதந்திரத்துடன் திகழ வேண்டும்” - மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிய புதுக்கோட்டை ஆட்சியர்..

”பெண்கள் பொருளாதார சுதந்திரத்துடன் திகழ வேண்டும்” - மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிய புதுக்கோட்டை ஆட்சியர்..

X
மாணவிகளுக்கு

மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிய ஆட்சியர்

Pudukkottai News | புதுக்கோட்டை மாவட்டம் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி ஆண்டு விழாவில்  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் கேடயங்கள் மற்றும் பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு வழங்கினார். 

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியின் 54-வது ஐம்பெரும் விழா நடைபெற்றது. அதில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கலந்துக்கொண்டார்.

விழாவில் பேசிய ஆட்சியர், ” சிறப்பு வாய்ந்த இந்த கல்லூரியின் ஆண்டு விழாவில் பங்கேற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செயலாகும். இந்த கல்லூரி பல தலைசிறந்த மனிதர்களை உருவாக்கி இருக்கிறது. ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் உயர் கல்வியை கற்கும் வகையில் இளங்கலை மற்றும் முதுகலை பிரிவுகளில் அதிகமான பாடப்பிரிவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

நமது வாழ்க்கையில் 100 சதவீத வெற்றியை ஈட்டுவதற்கு மற்றவர்கள் நமக்கு அளிக்கும் தன்னம்பிக்கை மிக முக்கியமானதாகும் அதனடிப்படையில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் தங்களிடம் பயிலும் மாணவ மாணவிகள் அனைவரையும் தங்களுடைய சொந்த பிள்ளைகளாக நினைத்து அவர்களுக்கு வெற்றிக்கான வழிமுறைகளை தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே மாணவிகள் அனைவரும் நல்ல முறையில் படித்து தங்களது படிப்பின் மூலம் பொருளாதார ரீதியாக தன்னிச்சையாக செயல்படும் வகையில் வருங்கால இந்தியாவின் சிறந்த குடிமக்களாக விளங்குவதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.அதனைத்தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

First published:

Tags: Local News, Pudukkottai