ஹோம் /புதுக்கோட்டை /

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் மீன் அமில உரம்.. புதுக்கோட்டை பெண் விவசாயியின் புதிய முயற்சி...

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் மீன் அமில உரம்.. புதுக்கோட்டை பெண் விவசாயியின் புதிய முயற்சி...

X
இயற்கையான

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் மீன் அமில உரம்

Women Farmer : புதுக்கோட்டையில் இயற்கை முறையில் மீன் அமில உரம் தயாரித்து செடிகளுக்கு உரமாக பயன்படுத்துகிறார் விவசாயி லெட்சுமி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் கொடியங்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லட்சுமி அனைத்து பயிர்களுக்கும் உரமாகவும், பூச்சி கொல்லியாக மீன் அமிலத்தை பயன்படுத்துகிறார். அதை தயார் செய்வது எப்படி என்று செய்முறை விளக்கம் அளிக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடியங்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி லட்சுமி. இவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து 3 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை முறையில் காய்கறிகளை பயிரிட்டு உள்ளார். அதற்கு செயற்கை மருந்துகளை தெளிக்காமல் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரத்தைப் பயன்படுத்தி ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் நெற்பயிர் ஆகியவற்றை உற்பதி செய்து அசத்தி வருகிறார். மேலும் இயற்கை பூச்சிக்கொல்லி மற்றும் உரங்களை தயார் செய்வது எப்படி என மக்களுக்கும் அவ்வப்போது அறிவுரை வழங்குகிறார்.

இதுகுறித்து பேசிய லட்சுமி, “நெல், பருத்தி, வெண்டை, கத்தரி, மிளகாய், தக்காளி போன்ற அனைத்து காய்கறி பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கமீன் அமிலம் தயாரிப்பு மிகவும் எளிது மற்றும் குறைந்த அளவிலான செலவு மட்டுமே ஆகும். அதாவது மீன் இறைச்சியின் கழிவுகள், அதே அளவு வெல்லம், வாழைப்பழம் என 3 பொருட்கள் வைத்து இதனை எளிதாக தயார் செய்து விடலாம்.

இவை மூன்றும் நன்கு கலந்து அதன் பின் அதனை மூடிய நிலையில் 21 நாட்கள் வைக்க வேண்டும். அதன் பின் மீன் அமிலம் தயாராகிவிடும். அதை எடுத்து தண்ணீர் கலந்து பயிர்களுக்கு, காய்கறி செடிகளுக்கு தெளித்து வந்தால் செடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும், பூச்சியும் கட்டுப்படும்.மேலும் ஆரோக்கியமான காய்கறிகள் நெல் மக்களுக்கு சேரும்” என்று தெரிவித்தார்.

First published:

Tags: Agriculture, Local News, Pudukkottai