ஹோம் /புதுக்கோட்டை /

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயிலுக்கு முளைப்பாரியுடன் ஊர்வலமாக வந்த புதுக்கோட்டை பெண்கள்..

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயிலுக்கு முளைப்பாரியுடன் ஊர்வலமாக வந்த புதுக்கோட்டை பெண்கள்..

X
புதுக்கோட்டை

புதுக்கோட்டை

Viralimalai Meikkannudayal Temple : முளைப்பாரியுடன் ஊர்வலமாக வந்த புதுக்கோட்டை பெண்கள்மார்கழி மாத திருவிளக்கு பூஜையின் இறுதி நாளில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து கோயிலில் வைத்து கும்மியடித்து குலவையிட்டு வழிபாடு நடத்தினர்.புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயிலில் மார்கழி மாத திருவிளக்கு பூஜையின் நிறைவு நாளில் பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயிலில் மார்கழி மாத திருவிளக்கு பூஜையின் நிறைவு நாளில் பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து விராலிமலை கிரிவலப் பாதையில் சுற்றி வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து தாங்கள் சுமந்து வந்த முளைப்பாரியை அம்மன் சன்னிதானத்தில் வைத்து சுற்றி நின்று கும்மியடித்து, குலவையிட்டு வழிபாடு நடத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

பெண்கள் அனைவரும் முளைப்பாரி பால்குடங்களை சுமந்து வந்து விராலிமலை முருகன் மலையை சுற்றி வந்து பின் மெய் கண்ணுடையாள் அம்மன் கோயிலில் ஒன்று கூடி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பாட்டுப் பாடி குலவையிட்டு கும்மி அடித்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

First published:

Tags: Local News, Pudukkottai