முகப்பு /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை | உயிரிழந்த கணவர்.. மகள்களின் உதவியுடன் கணவரின் தொழிலை செய்து வரும் சாதனை பெண்!

புதுக்கோட்டை | உயிரிழந்த கணவர்.. மகள்களின் உதவியுடன் கணவரின் தொழிலை செய்து வரும் சாதனை பெண்!

X
கடலை

கடலை மிட்டாய் தொழில் செய்து  வரும் பெண் தமிழ்ச்செல்வி 

pudukotai | புதுக்கோட்டை மாவட்டம் கல்லாலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இவர் தனது மகள் மற்றும் மேலும் இரு பெண்களை வேலைக்கு வைத்து கடலை மிட்டாய் தயாரிப்பை குடிசைத் தொழில் முறையில் செய்து வருகிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் கல்லாலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இவர் தனது மகள் மற்றும் மேலும் இரு பெண்களை வேலைக்கு வைத்து கடலை மிட்டாய் தயாரிப்பை குடிசைத் தொழில் முறையில் செய்து வருகிறார்.

தமிழ் செல்வியின் குடும்பத்தினர் 25 வருடங்களுக்கு மேலாக இந்த கடலைமிட்டாய் தொழில் செய்து வந்துள்ளனர். அதன் பின் கணவரை இழந்த தமிழ்ச் செல்வி தன்னம்பிக்கையிழக்காமல் இரு மகள்களை வைத்து அதே தொழிலை விடாமல் செய்து வருகிறார்.

இதுகுறித்து பேசிய தமிழ்ச்செல்வி, ‘எனது மகளின் உதவியோடு இந்த தொழிலில் நான் ஈடுபட்டு வருகிறேன். மொத்தமாகவும் சில்லறையாகவும் இந்த கடலை மிட்டாய்களை தயார் செய்து மிட்டாய் கடைகள் முதல் மளிகை கடைகள் என அனைத்து இடங்களிலும் தரமானதாக வழங்கி வருகிறோம். செலவுகள் போக மாதம் 15 ஆயிரம் ரூபாய் வருமானம் வருகிறது. வருடத்தில் 365 நாட்களுமே இந்த தொழிலை செய்ய முடியும். இந்த தொழில் எங்களுக்கு ஒரு கைத்தொழில் போல மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

நாங்கள் பச்சைப் பருப்பு வாங்கி அதை வறுத்து தோல் நீக்கி பிறகு உருண்டை வெல்லம் வைத்து பாகு தயார் செய்து பின் இரண்டையும் ஒன்றாக சேர்த்து கலந்து கடலை மிட்டாய் தயாரிக்கிறோம். அனைத்து செய் முறைகளையுமே இயந்திரங்கள் இல்லாமல் கைமுறைகளிலேயே செய்து வருகிறோம். இந்த தொழில் எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயனுள்ளதாக அமைகிறது என்றும் தெரிவித்தார்.

First published:

Tags: Entrepreneurship, Local News, Pudukkottai