புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலையை சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண், விவசாயிகள் அசோலா வளர்ப்பது குறித்தும் அதன் நன்மைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
காளான் வளர்ப்பு பயிற்சியாளரான புவனேஸ்வரி, அசோலா வளர்ப்பு முறைகளை தெளிவாக விளக்குகிறார்.அசோலா என்பது ஒரு பாசி வகையை சேர்ந்தது. இது நீரில் வளரக்கூடியது. இதில் நைட்ரஜன் சத்து அதிகமாக இருக்கிறது. புரோட்டின் அதிகமாக இருக்கிறது. நீரினை தமக்குள் தக்கவைத்து செடிகளுக்கு, மரங்களுக்கு கொடுக்கக்கூடியது. வயல்வெளிகளில் புதிய நாற்றுகள் நடும் பொழுது அதில் விடும் நீர் சீக்கிரம் ஆவியாகாமல் தடுக்க இந்த அசோலாவை நாம்பயன்படுத்தலாம்.
வயல்வெளிகளில் நாற்று நடும் பொழுதுஅசோலாவிடுவதன் மூலம் அதிக வெப்பத்தின் காரணமாக நீர் ஆவியாதல் தடுக்கப்படுகிறது. மேலும் நாற்றுகளின் வேர்களுக்கு வெயிலின் தாக்கம் படாமல் தடுக்கிறது. அறுவடைக்குப் பிறகு அசோலாவோடு உழவு செய்வதன் மூலம் மண்ணின் இயற்கை சத்து முழுவதும் பாதுகாக்கப்படுகிறது. மேலும் அசோலா ஆடு ,மாடு, கோழி, மீன்கள், பறவைகள் ஆகியவற்றிற்கு சிறந்த தீவனமாக இருக்கிறது.
தென்னை மரத்திற்கு அருகில்குழி தோண்டி அசோலாவை புதைப்பதன் மூலம் இதன் சத்து முழுமையாக தென்னை மரத்திற்கு கிடைக்கும். மேலும் மற்ற செடிகளுக்கும் இதை உரமாக பயன்படுத்த முடியும். அது மட்டுமில்லாமல் அசோலாவின் தண்ணீரையும் நாம் செடிகளுக்கு விடுவதன் மூலம் செடிகள் நன்கு வளரும். ஊட்டச்சத்து மிகுந்து கிடைக்கும்.
அசோலா வளர்ப்புக்கான செய்முறைகள்.
அசோலா தொட்டி அமைக்க தொட்டியின் அளவு குறைந்தது ஏழுக்கு நாலு அளவில் இருக்க வேண்டும்.தொட்டி சிமெண்ட் தொட்டியாகவோ அல்லது அசோலா படுக்கையாகவோ, தார்ப்பாயாகவோ இருக்கலாம். தொட்டியின் உயரம் ஒரு அடி இருக்க வேண்டும். இதில் போர் மண்ணும், செம்மண்ணும் எடுத்துக்கொண்டு இரண்டும் சம அளவு இருக்கும்படி ஒரு இன்ச் அளவு தொட்டியில் நிரப்பி சமப்படுத்தி கொள்ள வேண்டும்.
பிறகு அதில் முக்கால் அடி வரும் வரை நீர் நிரப்ப வேண்டும். நீர் நிரப்பிய பிறகு மாட்டு சாணம் நன்கு கரைத்து வடிகட்டி தேவையான அளவு அந்தத் தொட்டியில் ஊற்ற வேண்டும். பிறகு அதில் நாம் அசோலா விடலாம். முருங்கை தலை, வேப்பந்தலை, சிறிதளவு ஆங்காங்கு தூவி விட வேண்டும்.
நீரில் புழுக்கள் வைக்காமல் இருக்க பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசல் சிறிதளவு ஊற்ற வேண்டும். இதன் மூலம் புழுக்கள் வருவது தவிர்க்கலாம். அசோலா விட்டு ஒரு வாரத்தில் தொட்டி முழுவதும் நிரம்பி விடும். அதன் பிறகு நாம் அதனை ஆடு, மாடு ,கோழிகள், மீன்களுக்கு தீவனமாக பயன்படுத்தலாம்.
15 நாட்களுக்கு ஒரு முறை பாதியளவு தண்ணீர் மட்டும் மாற்ற வேண்டும். அசோலா நீரை வீணடிக்காமல் நாம் செடிகளுக்கு பயன்படுத்தலாம். இவ்வாறு இரண்டு முதல் மூன்று தொட்டி நாம் பராமரிக்க அசோலாவை நாம் நல்ல முறையில் வளர்க்க முடியும்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அசோலா தொட்டியை முழுவதுமாக செய்து புதிதாக மாற்றி விட்டால்அசோலா அழுகுவதை நாம் தடுக்கலாம்.
"மிரட்டும் கொரோனா" புதுக்கோட்டையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.. ஆய்வு செய்த ஆட்சியர்!
செய்தியாளர்- சினேகா விஜயன், புதுக்கோட்டை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai