Home /pudukkottai /

மண்வெட்டிகள் வாங்க கீரமங்கலத்தை நாடி வரும் அண்டை மாவட்ட விவசாயிகள்..

மண்வெட்டிகள் வாங்க கீரமங்கலத்தை நாடி வரும் அண்டை மாவட்ட விவசாயிகள்..

கீரமங்கலத்தில்

கீரமங்கலத்தில் மண்வெட்டி தயாரிப்பு மும்முரம்..

Pudukottai District | வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் உள்ள பட்டறைகளில் மண்வெட்டிகள் மற்றும் களைக்கொட்டுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள மண்வெட்டிகள் தயாரிக்கும் பட்டறைகளில் வடகிழக்கு பருவமழையை ஒட்டி மண்வெட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வடகிழக்குப் பருவமழை தான் தமிழ்நாட்டுக்கு அதிக மழையைத் தந்து விவசாயத்திற்கு உதவி புரியும் பருவமழையாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், விவசாயப் பயன்பாட்டிற்கான மண்வெட்டிகள், கலைக் கொட்டுகள் உள்ளிட்ட விவசாய உபகரணங்களை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கீரமங்கலம் இரும்பு பட்டறைகள்:

உருக்கு இரும்பு வாங்கி வந்து அதை தேவையான வடிவத்தில் வடிவமைத்து, மண்வெட்டி, கோடாரி, கலைக்கொட்டு உள்ளிட்ட விவசாயத்திற்குத் தேவையான உபகரணங்களைப் பட்டறையில் தயாரித்து வருகின்றனர். மூன்று முதல் ஐந்து நபர்கள் தினசரி இந்தப் பட்டறையில் பணியாற்றி வருடம் முழுவதும் மண்வெட்டி மற்றும் கலைக்கொட்டு உள்ளிட்ட உபகரணங்களைத் தயார் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:  பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் புதுக்கோட்டை அறம்வளர்த்த நாயகி திருக்கோவில்- சிறப்புகள் தெரியுமா?

வருடத்தின் அனைத்து நாட்களுமே புதுக்கோட்டை மட்டுமின்றி, தஞ்சாவூர், இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் கீரமங்கலத்தைத் தேடி வருகின்றனர். தரமான பொருளாக கொடுப்பதால் விலையில் சமரசம் இல்லை என்கின்றனர் பட்டறை ஊழியர்கள்.

புதுக்கோட்டை - மண்வெட்டி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளி


தற்போது விவசாயப் பணிகளுக்கான தேவை அதிகம் இருப்பதால் மண்வெட்டிகள், கலைக்கொட்டுகள் உள்ளிட்ட பொருட்களுக்கான தேவையும் அதிக அளவில் இருக்கிறது. மேலும் அந்த உபகரணங்களுக்கு பயன்படுத்தப்படும் பிடிக்காக பொரிசி மரத்தின் கட்டைகள் மட்டுமே பயன்படுத்தப் படுவதாகவும், அதுதான் நீண்ட நாள் உழைக்கக் கூடிய தன்மையை பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

தொழிலாளர்களின் வேதனை:

அரிவாள் உள்ளிட்ட பொருட்களை பெரும்பாலும் தயாரிப்பதில்லை என்பதால் போலிசாரும் பெரிய அளவில் நெருக்கடி தருவதில்லை என்கின்றனர் பட்டறை ஊழியர்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கடந்த 50 ஆண்டுகளாக இந்த பட்டறை இயங்கி வருவதாகவும், ஆனாலும் பெரிய அளவில் வருமானம் கிடைப்பதில்லை என்பதும் தான் இந்த தொழிலின் அவல நிலை. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்குத்தான் உரிய விலை கிடைப்பதில்லை என்றால், விவசாயத்திற்கு பயன்படும் உபகரணங்களைத் தயாரிப்பவர்களுக்கும் உரிய விலை கிடைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்றாக உள்ளது.
Published by:Arun
First published:

Tags: Local News, Pudukkottai

அடுத்த செய்தி