ஹோம் /புதுக்கோட்டை /

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது ஏன்? மின்வாரிய அதிகாரி விளக்கம்!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது ஏன்? மின்வாரிய அதிகாரி விளக்கம்!

X
ஆதார்

ஆதார் கார்ட் - மின் கட்டண இணைப்பு

புதுக்கோட்டையில் மின் நுகர்வோர்கள், தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன்  இணைப்பதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai

ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பது ஏன் என கேள்வி எழுப்பிய விவசாயிக்கு மின்சார வாரிய அதிகாரி ஒருவர் பொறுமையாக பதிலளித்தார்.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை கட்டாயம் மின் நுகர்வோர்கள், இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் கடந்த மாதம் அறிவித்தது.

மின்சார வாரியத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் மின் நுகர்வோர்கள், தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து வருகின்றனர். இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மின்சார அலுவலக வாரியத்தில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. மின்சார வாரிய அலுவலகங்களில் இலவசமாக இந்த சேவை இலவசமாக செய்து கொள்ளலாம் என மின்சார வாரியம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில், புதுக்கோட்டை மின் வினியோக கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் நுகர்வோர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு ஆதார் பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க | ''மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு.. காரணம் இதுதான்'' - மேடையில் பேசிய ஜி.ராமகிருஷ்ணன்!

பொதுமக்கள் தங்களது மின் பயனீட்டு அட்டை மற்றும் ஆதார் அட்டையை நேரடியாக கொண்டு சென்று, இணைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நுகர்வோர்கள் ஆன்லைன் மூலம் www.tangedco.gov.in என்ற இணையதளம் வழியாகவும் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மின்சார வாரிய அலுவலகத்தில் அதிக எண்ணிக்கையில் குவிந்த வண்ணம் உள்ளனர். ஒரு கோட்டத்திற்கு சுமார் 15 மின்சார வாரியங்கள் என்ற அளவில் இயங்கி வருகிறது. இதனால் கிராம மக்கள் சில இடங்களில் இந்த சேவையை பெற 20 கி.மீ பயணம் செய்ய வேண்டி உள்ளது.

அதனால் இந்த சேவையை அந்தந்த கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் இந்த சேவை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் இந்த இணைப்பு எதற்காக என பலர் மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது. அவ்வாறே விவசாயி அய்யாக்கண்ணுவுக்கும் சந்தேகம் எழ, மின்சார வாரிய அதிகாரிகள் விவசாயியின் சந்தேகத்தை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் தெளிவாக விளக்கம் அளித்தார்.

First published:

Tags: Aadhar, EB Bill, Local News, Pudukkottai