ஹோம் /புதுக்கோட்டை /

விராலிமலையில் தினமும் 1,000 பேருக்கு பசியை போக்கும் இவர்கள் யார்? எதற்காக இதை செய்கிறார்கள்?

விராலிமலையில் தினமும் 1,000 பேருக்கு பசியை போக்கும் இவர்கள் யார்? எதற்காக இதை செய்கிறார்கள்?

X
புதுக்கோட்டை

புதுக்கோட்டை இலவச உணவு

Viralimalai social activist | புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலையில் பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கும், கோவில்கள், சாலை ஓரங்களில் உள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கும் 4 பேர் கொண்ட குழுவினர் உணவு வழங்கி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலையில் பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கும், கோவில்கள், சாலை ஓரங்களில் உள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கும் பசியை போக்க உணவளிக்கும் அன்னப்பூரணிகள் பற்றிய செய்தித்தொகுப்பு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அகத்திய சன்மார்க்க சங்கத்தினர் தினந்தோறும் 1000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். விராலிமலை அருள்ஜோதி மண்டபத்தில் இந்த உணவு சமைக்கப்பட்டு 4 சக்கர வாகனத்தில் விராலிமலை பகுதி முழுவதும் சுற்றித்திரிந்து பசியால் வாடுபவர்களை இனம் கண்டு அவர்களுக்கு உணவளித்து வருகின்றனர்.

அதிகாலை முதலே இறைவனை வழிபட்டு இவர்கள் இந்த பணியை தொடங்குகின்றனர். ஒருவர் சந்தையில் காய்கறிகளை வாங்கி வந்தால் மற்றொருவர் அரிசி உலவைத்து தயார்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பின்னர் அனைவரும் சேர்ந்து உணவு சமைத்து அதை காலை 9:30 மணியில் இருந்தே வினியோகிக்க தொடங்கிவிடுகின்றனர். புளியோதரை, எலுமிச்சை சாதம், வெஜிடபிள் பிரியாணி, பொங்கல், கேசரி, வாழைப்பழம் என அவர்களின் மெனு நீண்டு கொண்டே போகிறது.

4 பேர் கொண்ட இந்த குழுவினர் வேலைகளை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு செய்து வருகின்றனர். அகத்திய சன்மார்க்கத்தினர் புதுக்கோட்டை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இந்த பணியை செய்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் வழங்கும் பொருள் உதவியின் மூலமே இது செய்யப்பட்டு வருவதாக இந்த சங்கத்தினர் உறுப்பினர் நம்மிடம் தெரிவித்தார்.”உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்பதற்கு ஏற்ப பல ஏழை எளிய மக்களின் பசியை போக்கி வருகின்றனர். இந்த அகத்திய சன்மார்க்க சங்கத்தினருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து விடைபெற்றோம்.

First published:

Tags: Food, Local News, Pudukkottai