முகப்பு /புதுக்கோட்டை /

‘குடிநீருக்காக தவிக்கிறோம்’ - பாட்டு பாடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்த புதுக்கோட்டை மாணவர்கள்!

‘குடிநீருக்காக தவிக்கிறோம்’ - பாட்டு பாடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்த புதுக்கோட்டை மாணவர்கள்!

X
பாட்டு

பாட்டு பாடிய புதுக்கோட்டை மாணவர்கள்

Pudukkottai News : புதுக்கோட்டை ஆலங்குடி அருகே உள்ள கலபம் கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, உலக தண்ணீர் தினத்தில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் பாடல் மூலம் தங்களது கோரிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட கலபம் கிராமத்தில், சுமார் 150க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுக்கு முன்பாக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் வழியாக குடி தண்ணீர் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது சரியாக குடிதண்ணீர் கிடைப்பதில்லை.

இதற்கு காரணம், 30 ஆயிரம் லிட்டர் கொள்ள அளவு கொண்ட நீர்தேக்க தொட்டி இடிக்கப்பட்டு சுமார் 2 ஆண்டுகள் ஆகிறது‌.

நீர்தேக்க தொட்டி இல்லாததால் தண்ணீர் நேரடியாக போரில் இருந்து வருவதால், இடையில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சரியாக வருவது இல்லை என்றும் மின் மோட்டார் அனைத்து விட்டால் தண்ணீர் உள்ளே சென்று விடுகிறது.

மேலும், வரும் வழியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால், அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாமல் நீண்ட நெடுந்தோறும் சென்று தண்ணீர் எடுக்கும் அவல நிலை இருந்து வருவதாக பகுதியைச் சேர்ந்த மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, இந்த சிரமத்தை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட துறையினருக்கு மனு கொடுத்து வந்ததாகவும், ஆனாலும், அப்பகுதியில் தண்ணீர் பிரச்சனை தீரவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பாட்டு பாடிய மாணவர்கள்

இந்நிலையில், கலபம் கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும் நாட்டுப்புற கலைஞருமான இளவரசன் என்பவர் அப்பகுதியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து பாடல் எழுதி உள்ள நிலையில், அந்தப் பாடலை உலக தண்ணீர் தினத்தில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் முத்துச்செல்வம், கேசவர்தினி மற்றும் உருமராஜா ஆகிய மூன்று மாணவர்கள் பாடி, இந்த பாடல் மூலம் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு!

அதில், அன்புள்ளம் கொண்ட முதல்வருக்கு மாணவர்கள் எழுதும் கடிதம், ஏதோ நாங்கள் இருக்கிறோம் குடி தண்ணீருக்காக தவிக்கிறோம் என்று தொடரும் அந்த பாடலில், குடிதண்ணிற்காக நீண்ட தொலைவு சென்று தண்ணீர் எடுத்து வருவதால் தாங்கள் பள்ளிக்கு செல்ல காலதாமதம் ஏற்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராமங்கள் தோறும் தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்” என பாடல் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: CM MK Stalin, DMK, Local News, Pudukkottai