புதுக்கோட்டை மாவட்டம் என்றாலே வறட்சியும் யூக்கலிப்டஸ் எனப்படும் தைல மரங்களும் தான் அனைவரின் நினைவுக்கும் வரும். ஆனால் தஞ்சை மாவட்டத்தை ஒட்டி இருக்கக்கூடிய புதுக்கோட்டை மாவட்டப் பகுதிகள் மற்றும் அறந்தாங்கி, ஆலங்குடி, கறம்பக்குடி உள்ளிட்ட தாலுகாக்கள் மிகவும் பசுமை நிறைந்த பகுதிகளாக இருந்து வருகின்றன.
அதிலும் குறிப்பாக ஆலங்குடி வட்டத்தில் கீரமங்கலம் பகுதியில் இருக்கக்கூடிய கிராமங்கள் அனைத்து வகையான விவசாயத்தையும் செய்து செழிப்பான பகுதியாக இருந்து வருகின்றன.
இதில் காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து வரக்கூடிய கல்லணை கால்வாயில் இருந்து பாசனம் பெறக்கூடிய மேற்பனைக்காடு பகுதியில் உள்ள நீர்நிலைகள் மற்றும் குளங்கள் அனைத்தும் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னதாகவே நிரம்பிவிட்டன.
இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கொடும்பாளூர் இதுதானா... புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலா தலம்
கல்லணை கால்வாயில் வரப்பெற்ற அதிக நீரால் குளங்கள் அனைத்தும் நிரம்பியுள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை ஆரம்பித்தால் குளங்களும் நிரம்பி தங்களது வயல்களுக்குள் தான் நீர் வரும் என்றும் மழைப் பொழிவின் போது அந்த நீரும் தங்களது வயல்களில்தான் தேங்கும் என்றும், அந்த நீரை வெளியேற்ற போதுமான வடிகால் வசதி இல்லை எனவும், இருக்கும் வடிகால் வசதியையும் அரசு நிர்வாகம் சரி செய்து தரவில்லை எனவும் மேற்பனைக்காடு மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மழை மற்றும் தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டால் கூட அதை ஏற்கும் மனநிலை இருப்பதாகவும், ஆனால் அதீத நீர் நிலத்தில் தேங்கி விவசாயம் வீணாவது மனதை புண்படுத்துவதாக இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உடனடியாக அரசு நிர்வாகம் வடிகாலுக்கு வசதி செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai