ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் கண்காணிப்பில் நீர்நிலைகள் - பேரிடர் குழு அதிகாரி சிறப்பு பேட்டி

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் கண்காணிப்பில் நீர்நிலைகள் - பேரிடர் குழு அதிகாரி சிறப்பு பேட்டி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

Pudukkottai District News : புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் தொடர்ந்து கண்கானிக்கப்பட்டு வருவதாகவும் தாழ்வான இடங்கள் என 77 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பேரிடர் அதிகாரி பிரத்தியேக பேட்டி.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Pudukkottai, India

  வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.

  இந்நிலையில், புதுக்கோட்டையில் கடந்த சில தினங்களாக விடாமல் இரண்டு நாட்கள் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

  அதேபோல் மழை நீர் வடிகால் அடைப்பால் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. அடைப்பை அப்புறப்படுத்தும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

  இதையும் படிங்க : சுற்றுவட்டாரமே கூடும் விராலிமலை சந்தை... விளைபொருளை விற்க விவசாயிகளின் முதல் தேர்வு!

  மேலும், மழை தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டால் 1077 என்ற அவசர எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

  பேரிடர் மேலாண்மை குழு சிறப்பு மேற்பார்வையாளர் சூரிய பிரபு நியூஸ் 18 உள்ளூர் செய்திக்குபிரத்தியேக பேட்டி அளித்தார். அதில் “மாவட்டத்திலுள்ள அனைத்து நீர் நிலைகளையும் 24 மணி நேரமும் பேரிடர் மேலாண்மை குழுக்கள் கண்காணித்து வருகிறோம். தற்போது தாழ்வான பகுதிகள் என 77 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

  அதேபோல் முகாம்கள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது. தேவைப்பட்டால் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் முகாமில் தங்கி கொள்ளலாம்” என அவர் தெரிவித்தார்.

  தொடர்ந்து பெய்து வரும் மழையாலும் பலத்த காற்று வீசுவதாலும் சாலைகள் மற்றும் கடைவீதிகள் பொது மக்களின் நடமாட்டம் என்று வெறுச்சோடி காணப்பட்டன. சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் சாய்ந்து விழுந்தன.

  இதையும் படிங்க : புதுக்கோட்டையில் நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்ய இந்த நாள் தான் கடைசி - விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

  மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி தருவதால் ஆங்காங்கே மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது. சாலைகளை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

  தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் இருந்து காய்கறிகள் மற்றும் பூக்களை பறிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அதேபோல நடவு பணிக்காக தயார் செய்யப்பட்ட வயல்வெளிகளில் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  சில பகுதிகளில் மின் கம்பங்கள் சேதம் அடைந்தன இது குறித்த தகவல் அறிந்த மின்சார ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேதம் அடைந்த மின் கம்பங்களில் மீண்டும் மின் இணைப்பை கொடுத்தனர்.

  செய்தியாளர் : ஸ்னேகா - புதுக்கோட்டை

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Pudukkottai