புதுக்கோட்டை நகரத்தில் திருக்கோகர்ணம் என்னும் ஊரில் அமைந்துள்ளது பிரகதாம்பாள் கோயில். இக்கோவிலின் மூலவர் கோகர்ணேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அம்பாளின் பெயர் பிரகதாம்பாள் (அரைக்காசு அம்மன்) என்பதாகும். செயற்கை கட்டுமானங்கள் இல்லாமல் முழுக்க முழுக்க பாறையை குடைந்து ,மண்டபங்கள் போன்றவற்றை கொண்டு குடைவரைக் குகைக் கோயிலான இந்த கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் பல்லவ அரசன் முதலாவது மகேந்திரவர்மன் காலத்தைச் சேர்ந்தது. புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் வம்சாவளி அரசர்கள் பெயரில் அடைமொழியாக ஸ்ரீ பிரகதாம்பதாஸ் என்று வருவதால் தொண்டைமான் அரச குடும்பத்தினர் குலதெய்வம் இங்குள்ள பிரகதாம்பாள் எனக் கூறலாம்.
மேலும் புதுக்கோட்டை மன்னர்களால் வெளியிடப்பட்ட நாணயம் புதுக்கோட்டை அம்மன் காசு அல்லது அம்மன் சல்லி என அழைக்கப்பட்டது. அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் பிரகதாம்பாள் அம்மன் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அரைக்காசு அம்மன் புதுக்கோட்டை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அம்மன் காசுகள் தான் புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த பொழுது புழக்கத்தில் இருந்த காசுகள். இந்த காசுகள் 16ம் நூற்றாண்டில் அச்சிடப்பட்டு 3 நூற்றாண்டுகள் புழக்கத்தில் இருந்தன. இந்த காசில் ஒருபுறம் விஜயா என்ற தெலுங்கு வார்த்தை பொறிக்கப்பட்டிருந்தன.
அப்போதைய அரையணாவுக்கு சமமானது என்பதால் அம்மனுக்கு அரை காசு அம்மன் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. அரைக்காசு அம்மனை வேண்டினால் தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும் என்பது பொதுவாக உள்ள கருத்து. மேலும் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை. சிற்ப அற்புதங்கள் நிறைந்த இந்த ஆலயத்தில், ஒவ்வொரு சன்னதியிலும் அழகு ததும்பி நிற்கும். இறைத் திருமேனிகளைக் கண் குளிர தரிசிக்கலாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
விநாயகப்பெருமானுக்கு அருகில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. முழுமுதற் கடவுளும் ஆனைமுகனுமான விநாயகருடன், ஞானகாரகனாக குரு தட்சிணாமூர்த்தி அருள்பாலிப்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்த கோயிலுக்கு வந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மேலும் புதுக்கோட்டை மன்னருக்கு குருவருள் கிடைத்த ஸ்தலமாக இந்த ஸ்தலம் விளங்குகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai