ஹோம் /புதுக்கோட்டை /

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவிலில் 5000 பெண்கள் பங்கேற்ற பிரமாண்ட விளக்கு பூஜை..

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவிலில் 5000 பெண்கள் பங்கேற்ற பிரமாண்ட விளக்கு பூஜை..

X
விளக்கு

விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் 

Viralimalai vilakku poojai | விராலிமலை புகழ்பெற்ற அருள்மிகு மெய்க்கண்ணுடையாள் அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற தை திருநாள் விளக்கு பூஜையில் 5000 பெண்கள் கலந்து கொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai

விராலிமலை புகழ்பெற்ற அருள்மிகு மெய்க்கண்ணுடையாள் அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற தை திருநாள் விளக்கு பூஜையில் 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மெய்கண்ணுடையாள் ஆலயத்தில் தை மாத பிறப்பை முன்னிட்டு 5000-க்கும் மேற்பட்டோர் விளக்கு பூஜையில் கலந்து கொண்டுள்ளனர்.

விராலிமலையில் பிரசித்தி பெற்ற மெய்கண்ணுடையாள் அம்மன் கோயிலில் தை மாத பிறப்பை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜை விழாவில் 5000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஒரே நேரத்தில் விளக்கேற்றி கூட்டு வழிபாட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

விராலிமலையில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோவில் மற்றும் அருள்மிகு மெய்கண்ணுடையாள் அம்மன் கோயில் அப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலாக திகழ்கிறது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாளில் பெண்கள் சிறப்பு அபிஷேக பூஜைகளிலும் திருவிளக்கேற்றி கூட்டு வழிபாட்டு பிரார்த்தனைகளிலும் ஈடுபடுவது வழக்கம்.

அதன் ஒரு பகுதியாக இன்று தை மாத பிறப்பை முன்னிட்டு விராலிமலை மெய்கண்ணுடையாள் அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 5000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு ஒரே நேரத்தில் விளக்கேற்றி கூட்டு வழிபாட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

பெண்கள் கூட்டாக இணைந்து சுமங்கலி பூஜை செய்தனர் மேலும் நல்ல மழை பெய்து வேளாண்மை செழிக்வும் நோய் நொடி இன்றி மக்கள் வாழவும் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

அதற்கு முன்னதாக விநாயகர் பூஜை | கலச பூஜை ,கோ பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.விளக்கு பூஜையில் கலந்து பெண்கள் அனைவருக்கும் முன்னாள் அமைச்சர் சார்பில் பொங்கல் பரிசாக மாங்கல்ய கயிருடன் கூடிய பிரசாத பை வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Pudukkottai