புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மெய்கண்ணுடையாள் கோயில் பல்வேறு சிறப்புகள் பெற்ற தலமாகும், வடக்கு பார்த்து அமர்ந்துள்ள இக்கோயில் தெய்வம், சுற்றுப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக போற்றி வணங்கப்படுகிறது.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வந்தாலும், சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு பெற்றதாகும். இந்த திருவிழா சித்திரை மாதம் இரண்டாம் செவ்வாய்க் கிழமை தொடங்கும். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அலகு குத்தியும், காவடி எடுத்தும், சிலா குத்தியும், ஆடு, கோழிகாளை பலியிட்டும் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
முன்னதாக கடந்த மே 2ம் தேதி காப்புகட்டுதலுடன் விழா தொடங்கியது, அன்றில் இருந்து தினமும் காலை, மாலை இருவேளைகளில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். உபயதாரர்கள் சார்பில் மண்டகபடி விழா நடத்தப்பட்டு தினந்தோறும் பொங்கல், புளியோதரை, சுண்டல், பானகம், நீர்மோர் என பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.
விழாவின் முக்கிய நிகழ்வான கோவில் முன்னாள் அமைக்கப்பட்டிருந்த பூ குழியில் (தீ குண்டம்) நூற்றுக்கணக்கான பக்தர்கள் தலையில் பால்குடம் சுமந்து வந்து தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
இதையும் படிங்க : கம்பம் டூ தென்கொரியா.. தேனி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் காவலர்..
தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு, கரும்பு தொட்டில், அங்கப்பிரதட்சணம், பால்குடம், முளைப்பாரி சுமந்து வந்து கோவிலில் வழிபாடுகள் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் பலர் நூற்றுக்கணக்கான ஆடு, கோழிகளை பலியிட்டு தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். மாலையில் இளைஞர்களின் படுகளம் விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கையில் கம்பு ஏந்தி ஆட்டு தலையை கம்பின் முனையில் குத்தி தூக்கி போட்டு விளையாடி ஊர்வலமாக வந்ததை மக்கள் கண்டு ரசித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai